Saturday, April 27, 2013

குருவருளே திருவருள் ...


ஆதிகுரு ...

குருவருள் பெறுதல்
 பார்க்கவென்று பலநுலுந் தேடிப்பார்க்க 
பக்குவங்க ளில்லையடா வயதோகொஞ்சம்
மார்க்கமுடன் கொஞ்சவய தானாலென்ன
மகத்தான சற்குருவைத் தேடிப்பார்த்து
ஏர்க்கையுட னவர்மனதுக் கேற்க நல்ல
இன்பமுடன் தயவுவர நடந்தாயானால்
தீர்க்கமுடன் சத்திசிவ தீச்சைவைத்து
செம்மையுடனுதியந்தத் திறஞ்சொல்வாரே.

... அகஸ்தியர்

  
ஆச்சென்று ஒடுங்குநிலை யறியவேணும் 
அறிந்துமன துரிமையினா லேறவேணும்
மூச்சென்ற வாசியினா லேறியந்த
முத்திதருந் தீபமதைக் காணவேண்டும்
பேச்சென்ற சத்திசிவ சூட்சங்கொண்டு
பெலமான சூட்சமதா லிறங்கவேணும்
ஆச்சென்று யேறுதுறை யிறங்குதுறைகண்டால் 
ஆதிசிவ சோதியென அறியலாமே.
... அகத்தியர்

தானேகேள் நாசியது வுந்திதொந்தம்
தாக்கான வங்காதி குடலெலும்பு
மோனான தசையோடு யிரத்தம்நீரும்
முனையான வஸ்தியோடு நரம்புதானும்
வேனான யிடைகலை பிங்கலையுமாம்
வெட்டவெளி யம்பரத்தின் வுச்சமாகும்
பானான பரஞ்சுடர்போல் கபாலம்பற்றி
பாலகரே ரோமமது தெறிக்கும்பாரே.
அகஸ்தியர் 

 

சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஜகத்குரு காஞ்சி காமகோடி பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்  திருவடிகள் சரணம்.



திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் திருவடியே போற்றி  


 ஆதிசிவ சத்தியிட முதலேகாப்பு
அண்டரண்டந் தான்புகழுங் கடவுள்காப்பு
பாதிமதி சடையணிந்த முடியோன்காப்பு
பாருலகில் சித்தியுறும் பாலன்காப்பு
சுடரொளியாஞ் சூட்சாதி சுமுகன்காப்பு
நீதியெனும் மாதேவி நிறையோன் காப்பு
நீடாழி வுலகுபதி காப்புபாரே 

குருவடி சரணம் திருவடி சரணம்
குருவருளே திருவருள்
ஓம் ஈஸ்வரா குருதேவாஅருள்வாய் ஈஸ்வரா!



No comments:

Post a Comment