Wednesday, July 31, 2013

சோமசூக்த பிரதட்சணம்



சோமசூக்த பிரதட்சணம் என்றால் என்ன?

பிரதோஷ வேளையில் ஈசனை வலம் வரும் முறையை சோமசூக்தப் பிரதட்சணம் என அழைக்கிறோம்.

முதலில் நந்திதேவரைத் தரிசனம் செய்து
அங்கிருந்து இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து,
சென்ற வழியே திரும்பி நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்ய வேண்டும்.
பிறகு மீண்டும், அங்கு நின்று வலமாகச் சென்று பராசக்தியாய் விளங்கும் கோமுகி எனப்படும் சிவபெருமானின் அபிஷேக நீர்வரும் துவார வழியைத் தரிசனம் செய்து,
சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்து,
அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து,
அங்கு நின்று சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்யாது வலமாக சென்று,
பராசக்தியாகிய கோமுகியைத் தரிசித்து
மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து தேவரைத் தரிசியாது இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து,
சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்து
பின்னரே சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

இதுவே சோமசூக்த பிரதட்சணம் ஆகும்.
இது அனைத்துப் பாவத்தையும் போக்கிவிடும் வல்லமை வாய்ந்தது. அதே சமயம் அனைத்துவிதமான செல்வ வளத்தையும் தரக்கூடியது.

...

நான்கு வேதங்களில் இரண்டாவதாக இருக்கும், யஜுர் வேதத்தின் இருதயம் போன்று இருக்கும் ஸ்ரீ ருத்ரம் எனும் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது.
அந்த ஸ்ரீ ருத்ர மந்திரத்தின் சிறப்பு பகுதியாக விளங்குவது ருத்ரனை நமஸ்கரிக்கும் விதமாக அமைந்த நமகம் பகுதி.”ருத்ராயா ததாவினே க்ஷேத்ராணாம் பதயே நமோ நமோ” - रु॒द्राया॑तता॒विने॒ क्षेत्रा॑णां॒ पत॑ये॒ नमो॒ नमः॑ - (துன்பங்களைத் துடைப்பவரும், உலகைப் படைத்துக் காப்பவரும் ஆகிய ருத்ரனாகிய பரமேஸ்வரனுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்).
நமகம் எனும் மந்திரத்தை உள்ளடக்கிய ஸ்ரீ ருத்ரத்தைச் சொல்வதும், கேட்பதும் பரமேஸ்வரனையே ஆயிரத்து எட்டு முறை வலம் வந்து நமஸ்கரித்தலுக்கான பலன் கிடைக்கும். ஸ்ரீ ருத்ர மந்திரங்களால் மகேஸ்வரனை மானசீகமாக நமஸ்கரிப்பது மகத்தான பலனைத் தரக்கூடியது.

...

வள்ளலார் ...

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடித்தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே.
அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடித்தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திருநட இன்பம் என்று அறியாயோ மகளே.

...

... யாவும் அடியேனால் அனைத்து வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.










No comments:

Post a Comment