Wednesday, August 14, 2013

ஐக்கிய ஸ்வரூபம் கோமாதா

...

கோமாதா


கொம்புகளின் அடியில் – பிரம்மன், திருமால்

கொம்புகளின் நுனியில் – கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்

சிரம் – சிவபெருமான்

நெற்றி நடுவில் – சிவசக்தி

மூக்கு நுனியில் – குமரக் கடவுள்

மூக்கினுள் – வித்தியாதரர்

இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்

இரு கண்கள் – சந்திரர், சூரியர்

பற்கள் – வாயு தேவர்

ஒளியுள்ள நாவில் – வருண பகவான்

ஓங்காரமுடைய நெஞ்சில் – கலைமகள

மணித்தலம் – இமயனும் இயக்கர்களும்

உதட்டில் – உதயாத்தமன சந்தி தேவதைகள்

கழுத்தில் – இந்திரன்

முரிப்பில் – பன்னிரு ஆரியர்கள்

மார்பில் – சாத்திய தேவர்கள்

நான்கு கால்களில் – அனிலன் எனும் வாயு

முழந்தாள்களில் – மருத்துவர்

குளம்பு நுனியில் – சர்ப்பர்கள்

குளம்பின் நடுவில் – கந்தவர்கள்

குளம்பிம் மேல் இடத்தில் – அரம்பை மாதர்

முதுகில் – உருத்திரர்

சந்திகள் தோறும் – எட்டு வசுக்கள்

அரைப் பரப்பில் – பிதிர் தேவதைகள்

யோனியில் – ஏழு மாதர்கள்

குதத்தில் – இலக்குமி தேவி

வாயில் – சர்ப்பரசர்கள்

வாலின் முடியில் – ஆத்திகன்

மூத்திரத்தில் – ஆகாய கங்கை

சாணத்தில் – யமுனை நதி

ரோமங்களில் – மகாமுனிவர்கள்

வயிற்றில் – பூமாதேவி

மடிக்காம்பில் – சகல சமுத்திரங்கள்

சடாத்களியில் – காருக பத்தியம்

இதயத்தில் – ஆசுவனீயம்

முகத்தில் – தட்சிணாக்கினி

எலும்பிலும், சுக்கிலத்திலும் – யாகத் தொழில் முழுவதும்

எல்லா அங்கங்கள் தோறும் – கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள் .

....

“ நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொருப் பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.”
- ஸ்ரீ பரமேஸ்வரன்

...

நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கு காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்துவைத்திருப்பான். அதை கண்டுபிடிப்பதில் தான் அனைவரும் வேறு படுகின்றனர்.

.....

ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.



No comments:

Post a Comment