Saturday, August 17, 2013

அகத்தியர் .. போகர் .. கருவூரார்

...

சாயா புருஷ தரிசனம் - போகர்

சாயா புருஷ தரிசனம் என்பது தன் நிழல் உருவத்தைத் தானே பார்ப்பதுவாகும்.

அது எப்படி எனறால் பூமியில் மேடு பள்ளம் இல்லாத சமதரையில் காலை-8 மணிமுதல் 9 மணிக்குள்ளாக தனது நிழலைப் பார்த்தவாறு நிற்கவும். தனது கால் அடி 7-8-9 அடி தூரத்துக்கு தனது நிழல் படும்போது அந்நிழலை 1 நிமிடம் அல்லது 2 நிமிடம் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும். கண் இமைக்காமல் பார்த்து விட்டு அப்படியே தலையை நிமிர்த்தி சுத்தமான நீலவானத்தை பார்த்தால் அங்கே தனது உருவப்பிம்பம் தோன்றும்.

அது,

*பொன்னிறமாக தெரிந்தால் அதைப்பார்பவர்க்கு செல்வம் உண்டாகும்.

*வெண்மையாக தெரிந்தால் பிராண பயம் இல்லை, அயுள் வளரும்.

*கருமையாகத் தெரிந்தால் வியாதிகள் வரும்.

*அந்த உருவத்தில் கை,கால்கள் தெரியதிருந்தால் 3 மாதத்தில் மரணம் ஏற்படும்.

*தலையே இல்லாமல் தெரிந்தால் 1 மாதத்தில் மரணம் ஏற்படும்.

*மார்பில் துவாரம்(ஓட்டை)தெரிந்தால் 6 மாதத்தில் மரணமாவான்.

*உருவ நிழலில் ஏதேனும் குறையாக தெரிந்தால் மரணம் ஏற்படுவது உறுதி.

*மனோன்மணியாள் சொரூபம் போல் ரூபத்தை கண்டாயானால் இவ்வுலகில் வெகுகாலம் இருப்பது உறுதி.

இதேபோல் பனிரெண்டு ஆண்டுகள் சாயாபுருஷ தரிசனத்தை கண்டால் உன் நிழல் உருவம் எப்போதும் உன்னை பின்தொடர்ந்து நிற்கும். நீ தூங்கும்போதும், நடக்கும் போதும், உட்கார்ந்திருக்கும் போதும், ஒருவருடன் பேசும்போதும, உண்மையாக உனக்கு வருங்காலத்தை கூறும். வரும் நன்மை,தீமைகளை முன்பே சொல்லும்,
உண் உடம்பு கல்தூண் போலாகும். வையகத்தில் கோடிக்காலம் இருப்பது உறுதி.
நாறும் உடல் அழியாது கோடிக்காலம் இவ்வுலகில் சமாதியில் இருக்கலாம்.

சாயா புருஷ தரிசனத்தை கண்டவர்க்கு எல்லாம் சித்தியாகும். அஷ்டமா சித்திகளை அடைவதில் ஐயமில்லை. பனிரெண்டு ஆண்டுகள் இதை கண்டவர்க்கு மட்டுமே இது சித்தியாகும், அப்படி காணாதவர்க்கு விட்டகுறை (பூர்வ ஜென்ம புண்ணியம்)இருந்தாலும் இது வாய்க்காது.

மேலும் இத்தரிசனத்தை கண்டவர்கள் தானும் ஒரு சித்தனைப்போல் மலைகளில் இருக்கலாம். அங்குள்ள தேவரிஷிககளை காணலாம்.

இந்த முறையை தென் திசையில் வாழ்ந்த அகத்தியர் தனக்கு சொன்னதாக கூறுகிறார் போகர் தனது 'போகர் ஏழாயிரம்' என்னும் நூலில்.

...

மனிதனாக பிறந்த நாம் அறிந்து அறியாமலும் நித்தம் பல பாவங்களை செய்து கொண்டுதான் இருக்கிறோம். அதன் பயனாய் வறுமை, உடல் நலக்குறைவு, காரியத்தடை, தீராத கவலை என
எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம்.

"அப்படி நம்மை பாடாய்படுத்தும் அந்த பாவங்களை களைய வழியே இல்லையா? செய்த பாவங்களுக்கு பிரயாசித்தம்தான் என்ன? இனியாவது மனம் திருந்தி நல்வழியில் வாழ்ந்து மோட்ச நிலையை அடையமுடியாதா?" என ஏங்குவோரும்,
"நம் முன்னோர்கள் செய்த பாவங்களால் பிள்ளை இல்லாமல் போவது, குடும்பம் வறுமையிலே இருப்பது, அனைத்திலும் தோல்வி உண்டாதல், தீராத நோய்க்கு ஆட்படுதல், கை,கால் ஊனமாதல், மூளை வளர்ச்சி இன்மை, அற்ப ஆயுளில் மரணம் ஏற்படுதல்" போன்ற பாவவினைகளை அனுபவிப்பவர்களும்
இனியாவது மனசுத்தியோடு நீண்டகாலம் நிம்மதியாக வாழ்ந்து மோட்ச நிலையை அடைய இப்பதிவு ஒரு விளக்கின் ஒளி போல உங்களுக்கு வழிகாட்டடும்.

பாவங்கள் விலக மந்திரம் - அகத்தியர்

காணவே யின்னமொரு சூட்சங்ககேளு
கருணையுட னுலத்தோடிருக்கும்போது
பூணவே கண்ணாரக் கண்டபாவம்
புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்
பேணவே காதாரக் கேட்டபாவம்
பெண்வதைகள் கோவதைகள் செய்தபாவம்
ஊணவே பலவுயிரைக் கொன்றபாவம்
ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே.

காரப்பா கருணைவிழி மனக்கண்ணாலே
காலறிந்து யோகமதால் அங்லங்கென்று
நேரப்பா நிலையறிந்து நிலையில்நின்று
நீ மகனே நூற்றெட்டு உருவேசெய்தால்
வீரப்பா கொண்டுயிரைக் கொண்டபாவம்
வெகுகோடி பாவமெல்லாம் விலகுந்தானே.

-அகத்தியர் பரிபூரணம் 1200

பொருள்:

உங்களின் பாவங்கள் நீங்க ஒரு சூட்சமத்தை சொல்கிறேன் கேளுங்கள்.
நீங்கள் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தாலும், யாருக்கும் எந்த பாவமும் செய்யாதிருந்தபோதிலும், உங்கள் வாழ்வில் பாவங்கள் சேர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அது எப்படி என்றால்
ஒருவன் செய்யும் பாவச்செயலை கண்டும் அதை தடுக்காமல் போவதும் (கண்ணாரக் கண்டபாவம்),
தீய சொற்களையும், தீயவர்களின் வஞ்சகப்பேச்சுகளை, அவச்சொற்களை கேட்பது (காதாரக் கேட்டபாவம்),
உங்கள் மனமகிழ்ச்சிக்காக பிறரை துன்புறுத்துவது (மனதாரச் செய்தபாவம்),
பெண்களை ொடுமைப்படுத்து, பசுக்களை துன்புறுத்துவது, ஓரறிவு முதல் ஆரறிவு வரையிலான உயிர்களை கொன்ற பாவங்கள், உங்களின் முன்னோர்கள் செய்த பாவமென எத்தனை கோடிப்பாவங்கள்
இருந்தாலும், அவைகள் நீங்க ஒரு சூட்சம மந்திரத்தை சொல்கிறேன் கேளுங்கள்.

' உடல் சுத்தியுடன் சுத்தமான இடத்தில் மான்தோல் விரித்து (இன்றைய நிலையில் அது சாத்தியம் இல்லை என்பதால் அதற்கு நிகர் கம்பளியை விரித்து), வடமேற்கு திசை நோக்கி அமர்ந்துகொண்டு, மூச்சை இடதுபக்க நாசியில் மெதுவாக இழுத்து அடக்கிக்கொண்டு, மனஓர்நிலையோடு மனதினுள் "ஓம் அங் லங்" என்ற மந்திரத்தை 108 -உரு செபிக்க வேண்டும். இப்படி செபிப்பதால் உயிரைக்கொன்ற
பாவம் முதல் எப்படிப்பட்ட கொடியபாவங்களும் விலகி விடும்' என்கிறார் அகத்திய மாமுனிவர்.

...

கருவூரார் அருளிய மந்திரங்கள் : கருவூரார் பலதிரட்டு

முதலில் குருவினை மனதால் துதித்து பின்பு மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும். முதலில் குறைந்தது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உபயோகிக்கலாம்.
இவ்வாறு தொடர்ந்து உச்சரிக்கும் போது அந்த மந்திரங்கள் சித்தியாகும் . பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 108 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்கும். இம்மந்திரங்கள் அனைத்தும் கருவூரார் பலதிரட்டு என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.

தத்புருஷமுகம மந்திரங்கள்:

'நமசிவாய' என உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும்.

"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.

"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகும்.

"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகும்.

"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டும்.

"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.


அகோரமுகம்-மந்திரங்கள்:

"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.

"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.

"வசால வசால சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.

"சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.

"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.

"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்


வாமதேவமுகம்-மந்திரங்கள்

"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டும்.

"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியும்.

"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.

"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.


சத்யோசாத மந்திரங்கள்

"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.

"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.

"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்



ஈசானமுகம்-மந்திரங்கள்

"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.

"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.

"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.

"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.

"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.

...

வலைப்பதிவர் S.கலைச்செல்வன் வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். தகவல்களுக்கு மிக்க நன்றி.



No comments:

Post a Comment