Tuesday, August 27, 2013

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டக கவச ஸ்தோத்ரம்

..

|| ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ ||

பக்தியின் மூலம் ஒருவர் பிரம்மத்தை அடைய முடியும் என்பது மஹா வேதாந்தியான ஆதி சங்கராச்சாரியார் நம்பிக்கை. அதன் விளைவு, அவரால் இயற்றப்பட்ட, விலை மதிக்க இயலாத அவரின் ஸ்தோத்ர ரத்னங்கள்.

ஸ்ரீமத் சங்கராச்சாரியார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை நோக்கித் தவமிருந்த போது, கிருஷ்ணனின் லீலா விநோதங்களை புகழ்ந்து போற்றும் இந்த கிருஷ்ண அஷ்டக கவசத்தை அருளினார். மகத்தான இந்த ஸ்தோத்ரத்தில் இருக்கும் ஸ்லோகங்களின் ஒவ்வொரு வார்த்தையும் தந்திர, மந்திர சக்தி வாய்ந்தது.

ஒவ்வொரு ஸ்லோகமும் உள்ளார்ந்த (ஆழமான) அர்த்தங்களை கொண்டது. கிருஷ்ண மந்திரத்துடன் சம்பூதிதமான (இணைந்த) இந்த ஸ்தோத்ரத்தின் ப்ரத்யேக ஸ்லோகம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் அருளை வேண்டி செய்யப்படும் பிரார்த்தனையில் (சாதனா) பல்வேறு விதமாக பயன் தரவல்லது.

இக்கவச ஸ்தோத்ரத்தை விதிப்பூர்வமாக ப்ராணப்ரதிஷ்டை செய்து பாராயணம் செய்து வந்தால் மந்திரசித்தி அளிக்கவல்லது. க்ருஷ்ண மந்திரம், தேவ மந்திரம், குரு மந்திரம் இம்மூன்றும் நிலையானது மட்டுமல்லாமல் நியமத்துடன் ஜபம் செய்ய வேண்டும். விசேஷமான தருணங்களில் கவச, ஸ்தோத்ர பாராயணமும் செய்ய வேண்டும்.

இவ்வருடம் கிருஷ்ண ஜன்மாஷ்டமி ஆகஸ்ட் 28 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று இரவு கிருஷ்ணனின் பால கோபால ரூபமாக அருளும் திருவுருவப் படத்தை ஸ்தாபிதம் செய்து இக்கவச ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்வது விசேஷமான பலன் தர வல்லது.

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டக கவச ஸ்தோத்ரம். எட்டு ஸ்லோகங்கள் வாயிலாக கிருஷ்ணனின் லீலா விநோதங்களை புகழ்ந்து போற்றும் அரிய கவசம். இந்த ஸ்தோத்ரமானது இசைக்க உகந்ததாக இயற்றப்பட்டுள்ளதால், இதை பாராயணம் செய்வதை விட கீர்த்தனையாக பாடுவது மிகவும் நல்லது.

यत्र गायन्ति मद्भक्ताः तत्र तिष्ठामि नारद।

பகவான் மஹாவிஷ்ணு, நாரதரிடம் இந்த ஸ்தோத்ரத்தின் மஹிமையைப் பற்றி கூறும் பொழுது, "நாரதா எங்கெல்லாம் ஸ்ரீ கிருஷ்ண கவச ஸ்தோத்ரமானது பக்தர்களால் பாராயணம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் நான் தோன்றுகிறேன்." என்று கூறுகிறார்.

நாமும் இத்தகைய அரிய ஸ்ரீக்ருஷ்ண அஷ்டக கவச ஸ்தோத்ரத்தை கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் பாராயணம் செய்து ஸ்ரீ கிருஷ்ணனின் அருளை வேண்டுவோம்.


श्री कृष्णाष्टक - शंकर भागवतपाद

॥ कृष्णाष्टकं॥

भजे व्रजैकमण्डनं समस्तपापखण्डनं , स्वभक्तचित्तरंजनं सदैव नन्दनन्दनम्।
सुपिच्छगुच्छमस्तकं सुनादवेणुहस्तकं , अनंगरंगसागरं नमामि कृष्णनागरम्॥ १॥
मनोजगर्वमोचनं विशाललोललोचनं , विधूतगोपशोचनं नमामि पद्मलोचनम्।
करारविन्दभूधरं स्मितावलोकसुन्दरं, महेन्द्रमानदारणं नमामि कृष्णावारणम्॥ २॥
कदम्बसूनकुण्डलं सुचारुगण्डमण्डलं , व्रजांगनैकवल्लभं नमामि कृष्णदुर्लभम्।
यशोदया समोदया सगोपया सनन्दया, युतं सुखैकदायकं नमामि गोपनायकम्॥ ३॥
सदैव पादपंकजं मदीय मानसे निजं , दधानमुक्तमालकं नमामि नन्दबालकम्।
समस्तदोषशोषणं समस्तलोकपोषणं , समस्तगोपमानसं नमामि नन्दलालसम्॥ ४॥
भुवो भरावतारकं भवाब्धिकर्णधारकं , यशोमतीकिशोरकं नमामि चित्तचोरकम्।
दृगन्तकान्तभंगिनं सदा सदालिसंगिनं , दिने दिने नवं नवं नमामि नन्दसम्भवम्॥ ५॥
गुणाकरं सुखाकरं कृपाकरं कृपापरं , सुरद्विषन्निकन्दनं नमामि गोपनन्दनम्।
नवीनगोपनागरं नवीनकेलिलम्पटं , नमामि मेघसुन्दरं तडित्प्रभालसत्पटम्॥ ६॥
समस्तगोपनन्दनं हृदम्बुजैकमोदनं , नमामि कुंजमध्यगं प्रसन्नभानुशोभनम्।
निकामकामदायकं दृगन्तचारुसायकं , रसालवेणुगायकं नमामि कुंजनायकम्॥ ७॥
विदग्धगोपिकामनोमनोज्ञतल्पशायिनं , नमामि कुंजकानने प्रव्रद्धवन्हिपायिनम्।
किशोरकान्तिरंजितं दृगंजनं सुशोभितं , गजेन्द्रमोक्षकारिणं नमामि श्रीविहारिणम्॥ ८॥
यदा तदा यथा तथा तथैव कृष्णसत्कथा , मया सदैव गीयतां तथा कृपा विधीयताम्।
प्रमाणिकाष्टकद्वयं जपत्यधीत्य यः पुमान , भवेत्स नन्दनन्दने भवे भवे सुभक्तिमान॥ ९॥

इति श्रीमच्छंकराचार्यकृतं श्रीकृष्णाष्टकं सम्पूर्णम्॥
श्री कृष्णार्पणमस्तु॥

ஸ்ரீ க்ருʼஷ்ணாஷ்டக - ஸ²ங்கர பகவத் பாத³

ப⁴ஜே வ்ரஜைகமண்ட³னம்ʼ ஸமஸ்தபாபக²ண்ட³னம்ʼ
ஸ்வப⁴க்தசித்தரஞ்ஜனம்ʼ ஸதை³வ நந்த³னந்த³னம்|
ஸுபிச்ச²கு³ச்ச²மஸ்தகம்ʼ ஸுனாத³வேணுஹஸ்தகம்ʼ
அனங்க³ரங்க³ஸாக³ரம்ʼ நமாமி க்ருʼஷ்ணனாக³ரம் ||1||

மனோஜக³ர்வமோசனம்ʼ விஸா²லலோலலோசனம்ʼ
விதூ⁴தகோ³பஸோ²சனம்ʼ நமாமி பத்³மலோசனம் |
கராரவிந்த³பூ⁴த⁴ரம்ʼ ஸ்மிதாவலோகஸுந்த³ரம்ʼ
மஹேந்த்³ரமானதா³ரணம்ʼ நமாமி க்ருʼஷ்ணவாரணம் ||2||

கத³ம்ப³ஸூனகுண்ட³லம்ʼ ஸுசாருக³ண்ட³மண்ட³லம்ʼ
வ்ரஜாங்க³னைகவல்லப⁴ம்ʼ நமாமி க்ருʼஷ்ணது³ர்லப⁴ம் |
யஸோ²த³யா ஸமோத³யா ஸகோ³பயா ஸநந்த³யா
யுதம்ʼ ஸுகை²கதா³யகம்ʼ நமாமி கோ³பநாயகம் ||3||

ஸதை³வ பாத³பங்கஜம்ʼ மதீ³ய மானஸே நிஜம்ʼ
த³தா⁴னமுக்தமாலகம்ʼ நமாமி நந்த³பா³லகம் |
ஸமஸ்ததோ³ஷஸோ²ஷணம்ʼ ஸமஸ்தலோகபோஷணம்ʼ
ஸமஸ்தகோ³பமானஸம்ʼ நமாமி நந்த³லாலஸம் ||4||

பு⁴வோ ப⁴ராவதாரகம்ʼ ப⁴வாப்³தி⁴கர்ணதா⁴ரகம்ʼ
யஸோ²மதீகிஸோ²ரகம்ʼ நமாமி சித்தசோரகம் |
த்³ருʼக³ந்தகாந்தப⁴ங்கி³னம்ʼ ஸதா³ ஸதா³லிஸங்கி³னம்ʼ
தி³னே தி³னே நவம்ʼ நவம்ʼ நமாமி நந்த³ஸம்ப⁴வம் ||5||

கு³ணாகரம்ʼ ஸுகா²கரம்ʼ க்ருʼபாகரம்ʼ க்ருʼபாபரம்ʼ
ஸுரத்³விஷன்னிகந்த³னம்ʼ நமாமி கோ³பனந்த³னம் |
நவீனகோ³பனாக³ரம்ʼ நவீனகேலிலம்படம்ʼ
நமாமி மேக⁴ஸுந்த³ரம்ʼ தடி³த்ப்ரபா⁴லஸத்படம் ||6||

ஸமஸ்தகோ³பனந்த³னம்ʼ ஹ்ருʼதாம்பு³ஜைகமோத³னம்ʼ
நமாமி குஞ்ஜமத்⁴யக³ம்ʼ ப்ரஸன்னபா⁴னுஸோ²ப⁴னம் |
நிகாமகாமதா³யகம்ʼ த்³ருʼக³ந்தசாருஸாயகம்ʼ
ரஸாலவேணுகா³யகம்ʼ நமாமி குஞ்ஜனாயகம் ||7||

வித³க்³த⁴கோ³பிகாமனோமனோஜ்ஞதல்பஸா²யினம்ʼ
நமாமி குஞ்ஜகானனே ப்ரவ்ரத்³த⁴வன்ஹிபாயினம் |
கிஸோ²ரகாந்திரஞ்ஜிதம்ʼ த்³ருʼக³ஞ்ஜனம்ʼ ஸுஸோ²பி⁴தம்ʼ
க³ஜேந்த்³ரமோக்ஷகாரிணம்ʼ நமாமி ஸ்ரீவிஹாரிணம் ||8||

யதா³ ததா³ யதா² ததா² ததை²வ க்ருʼஷ்ணஸத்கதா²
மயா ஸதை³வ கீ³யதாம்ʼ ததா² க்ருʼபா விதீ⁴யதாம் |
ப்ரமாணிகாஷ்டகத்³வயம்ʼ ஜபத்யதீ⁴த்ய ய​: புமான்
ப⁴வேத்ஸ நந்த³னந்த³னே ப⁴வே ப⁴வே ஸுப⁴க்திமான் ||9||

|| இதி ஸ்ரீமச்ச²ங்கராசார்யக்ருʼதம்ʼ ஸ்ரீக்ருʼஷ்ணாஷ்டகம்ʼ ஸம்பூர்ணம் ||
|| ஸ்ரீ க்ருʼஷ்ணார்பணமஸ்து||


1. கோகுலத்தின் (வ்ரஜ பூமி) (நந்தகுலத்தின்) சர்வ ஆபரணமாக விளங்கும் கிருஷ்ணா, பக்தர்களின் சகல பாபங்களையும் அழித்து ரட்சிப்பவனே, பக்தர்களின் சித்தத்தை ஆனந்தத்தில் ஆழ்த்தி மகிழ்விப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
குழல் கற்றைகள் நெற்றியில் நடனமாட, மயிற்பீலி அசையும் கிரீடத்துடன், கைகளில் இனிய நாதம் எழுப்பும் புல்லாங்குழல் ஏந்தி காட்சி அருளுபவனே, ப்ரேமம் என்னும் காதல் சமுத்திரத்தின் (சாகரம்) உருக் கொண்டவனே, லீலா விநோதங்களால் மகிழ்விக்கும் கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

2. மன்மதனின் கர்வத்தை அடக்கியவனே, விசாலமான விழிகளைக் கொண்டவனே, நந்தகோபியர்களின் சோகத்தை அழித்தவனே, தாமரை மலரை ஒத்த நயனங்களைக் கொண்டவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
கோவர்த்தனகிரியை கரங்களில் தூக்கி விரலில் ஏந்தியவனே, காண்பவர் கவரும் காந்தப்பார்வையும், புன்னகையும் கொண்டவனே, இந்திரனின் கர்வத்தை அழித்தவனே, கஜராஜனின் உருக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

3. கதம்ப மலரினால் ஆன குண்டலங்களை காதில் அணிந்தவனே, அழகிய கன்னங்களைக் கொண்டவனே, கோகுலத்தில் வாழும் கோபிகைகளின் ப்ரேமையின் தலைவனே, ப்ரேம பக்தியை தவிர வேறெந்த மார்க்கத்தாலும் அடைய முடியாதவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
கோபர்கள், நந்தகோபர் மற்றும் அளவில்லாத மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் யசோதாவினால் எக்கணமும் சூழப்பட்டு இருப்பவனே, தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனே, கோபர்களின் பிரபுவான ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

4. தன் கமலபாதங்களை பக்தர்களின் சித்தத்தில் (மனஸ் என்னும் சரோவரில்) ஸ்தாபிதம் செய்பவனே, அழகிய சுருண்ட கேசத்தைக் கொண்டவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
சகல தோஷங்களையும் நீக்குபவனே, அனைத்து லோகங்களையும் காத்து ரட்சிப்பவனே, கோகுலத்தின் கோபர்களின் ஹ்ருதயத்தில் வசிப்பவனே, நந்தகோபனின் மைந்தனான சிவப்பு நிற திருமேனியையுடைய ஸ்ரீ கிருஷ்ண சந்த்ரா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

5. கணக்கில்லா அரக்கர்களையும், தீயசக்திகளையும் அழித்து புவியின் பாரத்தை குறைப்பவனே, துக்கமயமான சம்சார சாகரத்தை கடக்க உதவுபவனே, யசோதையின் மைந்தனான நீ, அனைவரின் உள்ளங்களையும் கவருகின்றாய். உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
அருள் கடாக்ஷத்தை பொழியும் கவர்ச்சியான கண்களை கொண்டவனே, திவ்யமான தோழர்களால் (புனித பக்தர்களால்) சதா சூழப்பட்டு இருப்பவனே, நித்தம் நூதனமான லீலா விநோதங்களை நடத்தும் நந்தகுமாரா, (என்றும் புதிதாகத் தோன்றும் பரம்பொருளே!) ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

6. நற்குணங்கள், ஆனந்தம், கருணை இவற்றின் களஞ்சியமாக விளங்குபவனே, தேவர்களின் எதிரிகளை அழித்து கோபர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
நித்தம் குறும்புத்தனமான லீலைகளை நூதனமாக புரிபவனே, லீலா விநோதங்களின் விளைவுகளில் மகிழ்ச்சி கொள்ளும் இடையர் தலைவனே, கருமேக நிறத்தை கொண்ட உள்ளம் கவர் அழகிய கள்வனே, மின்னல் ஒளியை போல் ஜொலிக்கும் மஞ்சள் பட்டு பீதாம்பரத்தை அணிந்தவனே, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

7. கோகுலத்தின் கோபியர் அனைவருக்கும் ஆனந்தம் அளிப்பவனே, பக்தர்களின் இதயக்கமலத்தை ஆனந்தத்தால் மலரச் செய்பவனே, உலகுக்கு ஒளியூட்டும் சூரியனைப் போன்று பிரகாசத்துடன், கவரும் புன்னகையுடன் தோன்றுபவனே, பிருந்தாவனம் என்னும் தோப்பின் மத்தியில் கோபியருடன் நடனமாடும் பிருந்தாவன கிருஷ்ணா, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
பக்தர்களின் ஆசைகளை முற்றிலும் நிறைவேற்றுபவனே, அம்பை ஒத்த, பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய பார்வையை கொண்டவனே, இனிய, மதுரமான கானத்தை புல்லாங்குழலில் இசைப்பவனே, ஸ்ரீகிருஷ்ணா, பிருந்தாவன நாயகா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

8. நின்னை எக்கணமும் நினைத்து உருகும் சாதுர்யமான (புத்திசாலித்தனமான) கோபிகைகளின் மனதின் மென்மையான படுக்கையின் மீது உறங்குபவனே, பிருந்தாவனத்தில் (குஞ்ச்வன் - கொடிகளும், மரங்களும் நிறைந்த தோப்பு) கொழுந்து விட்டெரியும் அக்னியை (தாவானல்) விழுங்கி கோபர்களை காப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
பிள்ளைப்பருவ கவர்ச்சிகரமான தோற்றத்தில் ஜொலிக்கும் ஒளி நிரம்பிய விழிகளை உடையவனே, அந்த விழிகளுக்கு மை (அஞ்சனம்) மேலும் அழகு ஊட்டுகிறது. கஜேந்திரன் என்னும் கஜராஜனை முதலையின் பிடியில் இருந்து விடுவித்ததோடு மோட்சமும் அளித்தவனே, ஸ்ரீ என்னும் மஹாலட்சுமியின் மணாளா, கிருஷ்ணசந்த்ரா, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

9. என் மீது உங்கள் கருணை என்றும் நிலைத்து இருக்க அருள் புரியுங்கள். நான் எந்நிலையில் இருப்பினும், தங்களின் லீலா விநோதங்களின் புகழை எப்போதும் பாடிக் கொண்டிருக்க என்னை ஆசீர்வதியுங்கள். எவர் ஒருவர் இந்த ஸ்ரீகிருஷ்ண அஷ்டகத்தை பாராயணம் அல்லது ஜபம் செய்கிறாரோ, அவர் தன் அனைத்துப் பிறப்புகளிலும், கிருஷ்ணனின் மீது பக்தியுடன் பிறப்பர்.

... ஒரு வலைப்பூ பதிவு - http://kshetrayaatra.blogspot.in/ - படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.






No comments:

Post a Comment