Wednesday, August 7, 2013

அழகன் முருகனின் பதினாறு திருக்கோலங்கள்

...

நம் மனதினையும் கண்களையும் விட்டகலாத திருக்கோலம் அழகன் முருகனின் திருக்கோலங்களாகும்.

பதினாறு கோலங்களில் முருகன் அருளாட்சி புரிகின்றான்.

சக்திதரன் -
ஒரு முகம். இரு கரங்கள். சக்திப்படையுடன் காட்சியளிப்பவர்.

ஸ்கந்தன் -
இடையில் கௌபீணம் மட்டும் தரித்து தண்டம் பற்றிய பழனி ஆண்டியின் திருக்கோலம்.

கஜவாகனன் -
யானை மீதமர்ந்து நான்கு கரங்களுடன் கொண்ட கோலம்.

சரவணபவனன் -
பன்னிரு கரங்கள், ஒரு முகம், ஆறு குழந்தையாகத் தோன்றி அம்பிகையால் ஒரு முகமாக மாற்றப்பட்ட திருக்கோலம்.

தேவசேனாபதி -
இந்திரனின் மகளான தெய்வயானையை மணந்த கோலம். ஆறுமுகம் - பன்னிருகரங்கள்.

சுப்பிரமணியன் -
ஒரு முகம், நான்கு கரங்கள், ஆயுதம் பற்றிய கீழ்க்கரங்களால் அபயம், வரதம் அளித்து அருளும் கோலம் கொண்டவன்.

கார்த்திகேயன் -
ஆறுமுகங்களும் ஆறு கரங்களும் உடையவன். அபய-வரமளிக்கும் கரங்கள். பிற கரங்களில் ஆயுதங்கள்.

குமரன் -
நான்கு கரங்களுடன் தேவியான தெய்வயானை வலப்புறத்தில் அமைய நின்ற திருக்கோலத்தில் அருள்பவன்.

ஷண்முகன் - ஆறுமுகங்களோடு பன்னிரு கரங்கள் ஆயுதங்கள் ஏந்திய நிலை. மயில் மீது முருகன் அம்ர்ந்திருக்க அருகில் தேவியர் நின்ற கோலம்.

தாரகாரி -
சூரபத்மனின் தம்பியான தாரகாசுரனை அழிக்கப் பூண்ட கோலம். ஆறுமுகம் பன்னிரு கரங்களில் ஆயுதங்கள் ஏந்திய போர்த் திருக்கோலம்.

வள்ளிமணாளன் -
தமிழரின் பண்பாடான களவு ஒழுக்கத்தின் மூலம் காதல்கொண்டு கடுமணம் புரிந்த கோலம்.

பாலமுருகன் -
சிறிய பாலக வடிவம், ஒரு கரத்தில் தாமரை மலர்கள் , மற்றொரு கரத்தை இடைமீது இருத்திய அழகிய தோற்றம்.

சேனாளி -
ஆறுமுகம் - பன்னிரு கரங்கள், கீழிரு கரங்கள் அபய வரத முத்திரை , ஏனைய கரங்களில் ஆயுதங்கள்.

கிரௌஞ்சபேதன் -
தாரகன், சூரனின் தம்பி இவன் கிரௌஞ்சமலை என்ற மலையின் வடிவில் தனது அண்ணனின் கோட்டையைக் காத்து நின்றான். சக்திவேலின் மூலம் அவனை அழித்து நின்ற திருக்கோலம். ஆறுமுகம், ஆயுதம் தாங்கிய பன்னிருத் திருக்கோலங்கள்!

சிகிவாகனன் -
சூரனின் சம்ஹாரத்திற்குப் பின் மயிலான அசுரனின் மீது அமர்ந்த கோலம்!

பிரம்ம சாஸ்தா -
பிரணவத்தின் பொருளறியா பிரம்மனை சிறையிலடைத்து, தானே அவரது படைப்புத் தொழிலை ஏற்றதால், பிரம்மனது பொருட்களான அக்கமாலை, கெண்டி ஏந்திய திருக்கோலம்.

...

ஓம் ஸ்ரீ சுப்ரமணியர் ஞான திருமந்திரம் ...

வசி வசி யென்று நித்தம் செபித்தா யாகில்
மகத்தான சகலசௌ பாக்யமுண் டாம்
நசி நசி யென்று நித்தம் செபித்தா யாகில்
நலமில்லா சகல்வினை நாடா தோடும்
மசிமசி யென்று நித்தம் செபித்தா யாகில்
மகத்தான சமுதலாய் ரோகந்தீரும்
கசிகசி யென்று நித்தம் செபித்தா யாகில்
கணத்தெழுந்த சிலந்திப்புண் கரைந்து போமே!

போமப்பா அங்கிலிசிவ சீசீ யென்ன
பொல்லா மிருகமெல்லா மோடிப் போகும்
ஆமப்பா ஐய்யும் சவ்விம் கிலிவா வென்ன
அடங்காத மிருகமெல்லா மோடிப் போகும்
ஓமப்பா கிலியும் சவ்வும் ரங் ரங் கென்ன
உத்தமனே பக்ஷியெல்லா மொடுங்கி நிற்கும்
தாமப்பா நிலையறிந்து தியானஞ் செய்ய
தானவனா யிருந்து சித்து மாடலாமே!

இருந்து நிலைதனையறிந்து யோகஞ் செய்ய
ஏகாந்த மாமுனியே யொன்று கேளு;
வருந்தி நின்ற மிருகமெல்லாம் வசியமாகும்
மார்க்கமுடன் மந்திரந்தா னொன்று கேளு!
அருந்தவமாய்ச் சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு
அஃஅஃ யென்று நித்தம் அழுத்தியூது
பரிந்தாவா மிருகமெல்லாம் அசந்துபோகும்
பாலகனே சுழிமுனை யிற்று பதிவாய் நில்லு!

பதிவான விஷங்களெல்லாந் தீர்வதற்கு
பாலகனே மந்திரந்தா னொன்று கேளு
கெதியான அச்சரந்தான் சீசிங் சீ நசி நசியென்று
கிருபையுடன் பதினாறு உருவே செய்து
மதியான விபூதியை நீ கடாக்ஷித் தக்கால்
மகத்தான விஷங்க ளெல்லாம் மாண்டோடும்
விதியாளி யானதினாற் சொன்னேன் மைந்தா
வெகுவிதமாய் அவரவர்கள் செபித்தார் தானே!

செபிப்பதற்கு வெகுசுருக்கு மைந்தா கேளு
செலமதிலே தான் செபித்துக் கொடுக்கலாகும்
தவிப்பகல குலைப்பார்வை பார்க்கலாகும்
தக நினைத்து மந்திரத்தை செபிக்கலாகும்
குவிப்பான சிலந்திமுதல் வீக்கத்திற்கும்
குணமாகும் வெண்ணெயிலே தியானம் பண்ணு
கவிப்பான விஷமுதலாம் சில் விஷங்கள்
காணம லோடுதற்குக் கருவைக் கேளே!

கருவான மூலிகைதான் தும்பை வேந்தன்
கடிசான மேனியுடன் மூன்றுங் கூட்டி உருவான
நவாச்சாரம் கொஞ்சங் கூட்டி உத்தமனே
கசக்கி யந்த நயனத் தூட்டு!
பெரிதான விஷங்களது தலைமேற் கொண்டால்
பிழிந்தவுடன் ஓடுமடா பிணமானாலும்
விரிவான பசாசுமுதல் சென்னிக் கெல்லாம்
விபரமுள்ள நசியமதால் விட்டுப் போமே!


( இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். )




No comments:

Post a Comment