Tuesday, October 1, 2013

லலிதோபாக்யானம்


ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:
க எ இ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்


அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்

லலிதோபாக்யானம் ப்ரம்மாண்டபுராணத்தின் கடைசி 40 அத்தியாயங்களைக் கொண்டது ஆகும்.
ஸ்ரீ திரிபுரசுந்தரியான ஸ்ரீ லலிதா பரமேஷ்வரி தேவியின் சரிதையை ஹயக்ரீவருக்கும் அகத்தியருக்கும் நடக்கும் சம்பாஷணையாக கூறுகிறது. இதில் அம்பிகையின் அவதார மகிமையும், பண்டாஸுரனுடன் நடந்த போரும், பண்டாஸுர வதமும், விவரிக்கப்பட்டுள்ளது. அதனுடன், ஸ்ரீநகர வர்ணனையும், அம்பிகையின் மந்திர ஜெப தப முறைகளும், ஸ்ரீ சக்ர வழிபாட்டு முறையும், தீக்ஷை விபரமும் காணக்கிடைக்கின்றன.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்பவருக்கும், ஸ்ரீ தேவி உபாஸகருக்கும் இது ஒரு மிகவும் இன்றியமையாத நூலாகும்.

இந்த லலிதோபாக்யானத்திலிருந்து பெறப்பட்ட கீழ்க்கண்ட புஷ்பாஞ்ஜலியானது, அம்பிகைக்கு மிகவும் பிரியமானது. அம்பிகையின் திரு வாக்கினாலேயே இந்த ஸ்லொகத்தின் பலன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

இது கட்கமாலாவை ஒத்தது ஆயினும் இதற்கு தீக்ஷை ஒரு கட்டாயமானதன்று. சுத்தமான உடலும், மனமும், குருவருளும், பக்தியும் நிஷ்டையும் இதை பாராயணம் செய்ய போதுமானது.

முதலில் குருவந்தனம் ...

எங்கே, எப்படி யார் பூஜை செய்தாலும், அந்த பூஜை முறைகளை நமக்கு உபதேசித்த குருவை ஸாதகன் நினைவு கூர்தல் வேண்டும். பூஜைக்கு முக்கியம் குரு பாதம், மந்திரத்திற்கு முக்கியம் குரு வார்த்தை, த்யானத்திற்கு முக்கியம் குரு வடிவம், மோக்ஷத்திற்கு முக்கியம் குருவின் தயை என்று கரண ஆகமத்தில் சொல்லப்பட்டிருப்பதை நினைவு கூர்க.

குருவை துதித்த பின்னரே பகவானை அல்லது பகவதியை துதிக்க வேண்டும். பகவான் அல்லது பகவதி அபசாரங்களுக்கு கூட விமோசனம் உண்டு, ஆயின் குரு அபசாரத்திற்கு எந்த விமோசனமும் இல்லை என்று ஸகலாகம ஸங்க்ரஹ ஸ்லோகம் 1027 மூலம் அறியலாம்.
அதிகாண் கீழ்க்கண்ட ஸ்லோகங்களை சொல்லியே பூஜைகளை தொடங்கவேண்டும்

குரூர் ப்ரம்மா, குரூர் விஷ்ணு, குரூர் தேவோ மஹேஷ்வர: |
குரு ஸாக்ஷாத் பரப்ரம்ம, தஸ்மை ஸ்ரீ குருவே நம: ||

குருவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம் |
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தையே நம: ||

சதாசிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம் |
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் ||

குரு சரணாரவிந்தாப்யாம் நமோ நம: ||


கணநாத வந்தனம் ...

ஓம்கணானாம்த்வாகணபதிஹூம்ஹவாமஹே
கவிம்கவீனாம்உபமச்ரவஸ்தமம் |
ஜ்யேஷ்டராஜம்பிருஹ்மனாம்பிருஹ்மணஸ்பத
ஆன: ச்ருண்வன்னூதிபி: ஸீதஸாதனம் ||

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:


த்யானம்:

சிந்தூராருணவிக்ரஹாம்த்ரிநயனாம்மாணிக்யமௌலீஸ்புரத்
தாராநாயகசேகராம்ஸ்மிதமுகீம்ஆபீனவக்ஷோருஹாம் |
பாணிப்யாம்அளிபூர்ணரத்நசஷகம்ரக்தோத்பலம்பிப்ரதீம்
ஸௌம்யாம்ரத்னகடஸ்தரக்தசரணாம்த்யாயேத்பராமம்பிகாம் ||

அருணாம்கருணாதரங்கிதாக்ஷீம்த்ருதபாசாங்குசபுஷ்பபாணசாபாம் |
அணிமாதிபிரவ்ருதாம்மயூகைரஹமித்யேவவிபாவயேபவானீம் ||

இப்படியாக அம்பிகையின் ரூபத்தை சகல பூஷணங்களோடு நம் மனக்கண் முன் நிற்கவைத்து, அம்பிகையே இவ்வெழியோன் அளிக்கும் தன் சக்திக்கு உட்பட்ட, மற்றும் தனக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு செய்யும் பூஜை தனை பேரன்புடன் பரிபூரணம் என ஏற்றுக்கொண்டு, கருணையுடன் அருள் மழை பொழிவாயாக என்று வேண்டிக்கொண்டு, ஆதி சங்கரர் இயற்றிய மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவ பாராயணம் ஒரு முறை ஒரு சந்த்யயில் செய்து, கீழ் கொடுக்கப்பட்டுள்ள புஷ்பாஞ்சலியை சமர்ப்பித்தால், ஒவ்வொரு நாமாவிற்கும் ஓர் ஆயிரம் செந்தாமரை மலர்களை அம்பிகையின் பாதத்தில் சொரிந்த பலன் கிட்டும்.

இங்கு MULTIPLIER ஆக புஷ்பாஞ்சலியும், பூஜையாக மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவமும் இருக்கின்றன. இப்படி செய்யும்போது, ஒரு ஸ்தவம், பல்லாயிரக் கணாக்கான ஸ்தவாஞ்சலியாகிறது அன்றோ! பூஜா பலனும் அதுபோலவே பல ஆயிரக் கணக்கானதாகும்.
ஆயின் ஒரு விஷயம் கவனிக்க, தவறு செய்யின், அதன் பலனும் அப்படியே பல மடங்காகும் என்பதாம்


ஓம் ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், ஐம், க்லீம், ஸெள: ஓம் நம:
த்ரிபுரஸுந்தரி, ஹ்ருதயதேவி, சிரோதேவி, சிகாதேவி, கவசதேவி, நேத்ரதேவி, அஸ்த்ரதேவி,
காமேச்வரி, பகமாலிநி, நித்யக்லிந்நே, பேருண்டே, வந்ஹிவாஸிநி, மஹாவஜ்ரேஸ்வரி, வித்யேஸ்வரி,
பரசிவதூதி, த்வரிதே, குலஸுந்தரி, நித்யே, நீலபதாகே, விஜயே, ஸர்வமங்களே, ஜ்வாலாமாலிநி,
சித்ரே, மஹாநித்யே, பரமேஸ்வரி,
மித்ரேசமயி, ஷஷ்டீசமயி, ஓட்யாணமயி, சர்யாநாதமயி, லோபாமுத்ராமயி, அகஸ்த்யமயி, காலதாபனமயி,
தர்மாசார்யமயி, முக்தகேசீஸ்வரமயி, தீபகலாநாதமயி, விஷ்ணுதேவமயி, ப்ராபகரதேவமயி,
தேஜோதேவமயி, மநோஜதேவமயி,
அணிமாஸித்தே, மஹிமாஸித்தே, கரிமாஸித்தே, லகிமாஸித்தே, ஈசித்வஸித்தே, வசித்வஸித்தே,
ப்ராப்திஸித்தே, ப்ராகாம்யஸித்தே, ரஸஸித்தே, மோக்ஷஸித்தே,
ப்ராம்ஹி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்த்ராணி, சாமுண்டே, மஹாலக்ஷ்மி,
ஸர்வஸம்க்ஷோபிணி, ஸர்வவித்ராவிணி, ஸர்வாகர்ஷிணி, ஸர்வவசங்கரி, ஸர்வோந்மாதிநி,
ஸர்வமஹாங்குசே, ஸர்வகேசரி, ஸர்வபீஜேஸர்வயோநே, ஸர்வத்ரிகண்டே,
த்ரைலோக்யமோஹநசக்ரஸ்வாமிநி, ப்ரகடயோகிநி, பௌத்ததர்சநாங்கி,
காமாகர்ஷிணி, புத்யாகர்ஷிணி, அஹங்காராகர்ஷிணி, சப்தாகர்ஷிணி, ஸ்பர்சாகர்ஷிணி, ரூபாகர்ஷிணி,
ரஸாகர்ஷிணி, கந்தாகர்ஷிணி, சித்தாகர்ஷிணி, தைர்யாகர்ஷிணி, ஸ்ம்ருத்யாகர்ஷிணி, நாமாகர்ஷிணி,
பீஜாகர்ஷிணி, ஆத்மாகர்ஷிணி, அம்ருதாகர்ஷிணி, சரீராகர்ஷிணி,
குப்தயோகிநி, ஸர்வாசா பரிபூரக சக்ரஸ்வாமிநி, அநங்ககுஸுமே, அநங்கமேகலே, அநங்கமதனே,
அநங்கமதநாதுரே, அநங்கரேகே, அநங்கவேகிநி, அநங்காங்குசே, அநங்கமாலிநி, குப்ததரயோகிநி,
வைதிகதர்சநாங்கி, ஸர்வஸம்க்ஷோபகாரகசக்ரஸ்வாமினி, பூர்வாம்நாயாதிதேவதே, ஸ்ருஷ்டிரூபே,
ஸ்ர்வஸம்க்ஷோபிணி, ஸர்வவித்ராவிணி, ஸர்வாகர்ஷிணி, ஸர்வாஹ்லாதிநி, ஸர்வஸம்மோஹிநி,
ஸர்வஸ்தம்பிநி, ஸர்வஜ்ரும்பிணி, ஸர்வவசங்கரி, ஸர்வரஞ்ஜனி, ஸர்வோந்மாதினி, ஸர்வார்த்தஸாதிகே,
ஸர்வஸம்பத்ப்ரபூரணி, ஸர்வமந்த்ரமயி, ஸர்வத்வந்த்வக்ஷயங்கரி, ஸம்ப்ரதாயயோகிநி, ஸெளரதர்சநாங்கி,
ஸர்வஸெளபாக்யதாயகசக்ரே, ஸர்வஸித்தி ப்ரேதஸர்வஸம்பத்ப்ரதே, ஸர்வப்ரியங்கரி, ஸர்வமங்களாகாரிணி,
ஸர்வகாமப்ரதே, ஸர்வதுக்கவிமோசநி, ஸர்வம்ருத்யுப்ரசமநி, ஸர்வவிக்நநிவாரிணி, ஸர்வாங்கஸுந்தரி,
ஸர்வஸெளபாக்யதாயிநி, குலோத்தீர்ணயோகிநி,ஸர்வார்த்தஸாதகசக்ரே, ஸர்வக்ஞே, ஸர்வசக்தே,
ஸர்வைச்வர்யபலப்ரதே, ஸர்வக்ஞானமயி, ஸர்வவ்யாதிநிவாரணி, ஸர்வாதாரஸ்வரூபே, ஸர்வபாபஹரே,
ஸர்வாநந்தமயி, ஸர்வரக்ஷாஸ்வரூபிணி, ஸர்வேப்ஸிதப்ரதே,
நிகர்ப்பயோகிநி, வைஷ்ணவதர்சநாங்கி, ஸர்வரக்ஷாகரசக்ரேசி, தக்ஷிணாம்நாயேசி, ஸ்திதிரூபே,
வசிநி, காமேசி, மோதிநி, விமலே, அருணே, ஜயநி, ஸர்வேச்வரி, கௌலிநி, ரஹஸ்யயோகிநி,
சாக்ததர்சநாங்கி, ஸர்வரோகஹரசக்ரேசி, பச்சிமாம்நாயேசி, தநுர்பாணபாசாங்குசதேவதே,
காமேசி, வஜ்ரேசி, பகமாலிநி, அதிரஹஸ்யயோகிநி, சைவதர்சநாங்கி, ஸர்வஸித்திப்ரதசக்ரேசி,
உத்தராம்நாயேசி, ஸம்ஹாரரூபே, சுத்தபரே, பிந்துபீடகதே, மஹாத்ரிபுரஸுந்தரி, பராபராதிரஹஸ்யயோகிநி, சாம்பவதர்சநாங்கி, ஸர்வானந்தமயசக்ரேசி,
த்ரிபுரே, த்ரிபுரேசி, த்ரிபுரஸுந்தரி, த்ரிபுரவாஸிநி, த்ரிபுராஸ்ரீ: த்ரிபுரமாலிநி, த்ரிபுராஸித்தே, த்ரிபுராம்ப,
ஸர்வசக்ரஸ்தே,அநுத்தராம்நாயாக்யஸ்வரூபே, மஹாத்ரிபுரபைரவி, சதுர்விதகுணரூபே, குலே, அகுலே, குலாகுலே, மஹாகௌலிநி, ஸர்வோத்தரே, ஸர்வதர்சநாங்கி, நவாஸநஸ்திதேநவாக்ஷரி,
நவமிதுநாக்ருதே, மஹேசமாதவவிதாத்ரு, மந்மத, ஸ்கந்த, நந்தி, இந்த்ர, மநு, சந்த்ர, குபேராகஸ்த்யே,
துர்வாஸ: க்ரோதபட்டாரகவித்யாத்மிகே, கல்யாணதத்வத்ரயரூபே, சிவ சிவாத்மிகே,
பூர்ணப்ரம்ஹசக்தே-மஹாபரமேச்வரி, மஹா த்ரிபுரஸுந்தரி, தவஸ்ரீ பாதுகாம் பூஜயாமி நம: ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்!

சுபம்

“நமந்த்ரம்நோயந்த்ரம்ததபிசநஜானிஸ்துதிமஹோ;
நச்சஆவாஹனம்த்யானம்ததபிச்சநஜானேஸ்துதி-கதா: |
நஜானேமுத்ரிஸ்தேததபிச்சநஜானேவிலபனம்;
பரம்ஜானேமாதாஸ்தவதனுசரணம்க்லேஷஹரணம்” ||

...

ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் ' ஹைந்தவ திருவலம் ' தகவல்களுக்கு மிக்க நன்றி.

No comments:

Post a Comment