Tuesday, October 1, 2013

சிவராத்திரி விரதம் .. சிவதாண்டவம்


1. சிவராத்திரி விரதத்திற்கும், பூஜைக்கும் சௌரமானம், சாந்திரமானம் என்ற பாகுபாடே தேவையில்லை.

2. மாக க்ருஷ்ண சதுர்தசி என்பது பல ஆண்டுகளாக மாசி மாதத்தில் வந்துள்ளபடியால், எப்பொழுதும் மாசி மாதத்தில் தான் சிவராத்திரி ஏற்படும் என்று மக்களிடையே பொதுவான கருத்து ஏற்பட்டு விட்டது


3. ஆதித்யாஸ்தமயே காலே அஸ்தி சேத் யா சதுர்தசி |

தத்ராத்ரி: சிவராத்ரிஸ்யாத் ஸா பவேத் உத்தமோத்தமா ||

பொருள்: சூரியன் அஸ்தமன நேரத்தில் சதுர்தசி இருக்கக்கூடிய நாளின் இரவே உத்தமமான சிவராத்திரி என காமிக ஆகமம் கூறுகிறது.


4. ப்ரதோஷ வ்யாபிநி க்ராஹ்யா சிராத்ரி சதுர்தசி |

பொருள்: ப்ரதோஷ காலத்தில் த்ரயோதசியும் - சதுர்தசியும் இணைந்தால் அன்றைய இராத்திரி சிவராத்திரியாக ஏற்கத் தக்கது என்பது காமிக ஆகமம்.


5. சிவராத்திரி தோன்றிய காலத்தை ஹஸ்யாத்ரி கண்டம் என்னும் நூல் கீழ்வருமாறு தெரிவிக்கிறது.

மாக க்ருஷ்ண சதுர்தஸ்யாம் ஆதிதேவோ மஹாநிஸி |
சிவலிங்க மபூத் தத்ர கோடி ஸூர்ய சமப்ரபம் ||

பொருள்: சாந்திரமான மாக மாதத்தில் தேய்பிறை சதுர்தசி நடு இரவில் கோடி சூரிய பிராகசத்துடன் சிவலிங்க வடிவில் இறைவன் தோன்றினார்.


6. சிவராத்திரி விரத பலனைக் கூறியுள்ள ஸ்காந்த மஹா புராணத்தில் கீழ் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

அர்த்த ராத்ரயுதா யத்ர மாக க்ருஷ்ண சதுர்தசி |
சிவராத்திரி வ்ரதம் தத்ர வாஜிமேத பலம் லபேத் ||

பொருள்: சாந்திரமான மாக மாதத்தில் க்ருஷ்ண சதுர்தசியில் மஹா சிவராத்திரி வ்ரதம் அனுஷ்டித்தால் அஸ்வமேத பலன் கிட்டும் என்பதாகும்.

மாக மாத க்ருஷ்ண சதுர்தசியில் தான் நடுஇரவில் லிங்கோத்பவம் ஏற்பட்டது. பால்குணத்தில் அல்ல. இதுகுறித்து சிவாகமம் கூறுவதைப் பார்ப்போம்.


7. காரணாகமம்: ரவி கும்ப கதாத் பூர்வா மகராந்தே ப்ரபூஜயேத் |

ஸந்தான ஆகமம்: ரவி கும்ப கதாத் பூர்வா மகராந்தே ஸுபூஜனம் |

பொருள்: மேற்கூறிய ஆகம வாக்கியங்களின் பொருள், சூரியனானவர் கும்பராசிக்குள் பிரவேசிப்பதற்குள் சௌரமான மகர மாதமான தை மாதத்தில் மஹா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படலாம் என்பதாகும்.


8. தத்திதௌ சிவராத்ரம் ஸ்யாத் மாக மாசே சதுர்தசி |
மாக பால்குணயோர் மத்யே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசி || காரண ஆகமம்

இங்கு சற்று கவனிக்கவும்:

“மாக பால்குனயோர் மத்யே” என்ற வாக்கியத்திற்கு விளக்கம் கூறும்போது காசியில் வசிக்கும் ப்ரும்மஸ்ரீ கணேஸ்வர திராவிட் சாஸ்திரிகள் பல சிவாகம நூல்களை ஆராய்ந்து கூறுவதாவது:

அமாவாசையில் முடியும் சாந்திரமான மாக மாத க்ருஷ்ணபக்ஷ சதுர்தசியிலும், பௌர்ணமியில் முடியும் பால்குண மாத க்ருஷ்ண பக்ஷ சதுர்தசியிலும் மஹா சிவராத்திரி ஏற்படலாம்.


9. கோகுலாஷ்டமியிலிருந்து 185 ஆவது நாள் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள்.

10. மேலும் திதியானது முன் பின் இருப்பினும் திருவோண நட்சத்திரத்துடன் கூடிய சதுர்தசி மஹா சிவராத்திரி என்பது சாஸ்திர சம்மதம்.

ஆகவே பக்தர்கள் இனிவரும் காலங்களில் மாசி கிருஷ்ண சதுர்தசி வரும் காலமான மாசி மாதத்தில் வரும் சிவராத்தியில் விரதம் இருந்து அனுஷ்டித்து வரும்படி கோருகிறோம்.

சுபம்

சிவதாண்டவத்தின் போது சிவனின் உக்கிர நடனம் தாங்காமல் சர்வ லோகங்களும் நடுங்குகின்றன. பார்வதி, தேவர்கள், யோகிகள், ஞானிகள் என்று யார் சொல்லியும் சிவன் கேட்பதாயில்லை. எல்லா உயிர்களும் நடுங்குகின்றன.

கடைசியில் சிவனின் வாகனமான நதிகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு வேண்டி சிவனின் பயங்கர தாண்டவத்தால் உலகமே நடுங்குவதாகச் சொல்லுகிறார்.

அப்போது சிவன், ‘நான் எங்கே போய் ஆடுவது?’ என்று கேட்க, ‘என் தலையிலே ஏறி ஆடுங்கள், நான் தாங்கிக் கொள்கிறேன்’ என்று நந்தி சொல்கிறார். விடையேறிய பெருமான் விடையின் கொம்புகளுக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடுகிறார்.

சிவனின் ருத்ர தாண்டவத்தைத் தன் தலையில் தாங்கிப் பின் சிவனின் கோபத்தைத் தணிக்க உதவியதால் அந்த நேரத்தில், அதாவது அந்தத் ‘த்ரயோதசி’ தினத்து சாயங்காலத்தில், பிரதோஷம் என்று இன்னமும் எல்லா சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது,

அதனால் அந்த நேரத்தில் நந்திக்கு பூஜை செய்தால் சிவபதத்தையடையலாம்.

சிவபிரானுக்கு நெய்யபிஷேகஞ் செய்தலால் ஆயிரங்கோடி வருடங்களில் செய்யப்பெற்ற மகா பாவங்கள் நீங்கும். ஒரு மாதம் நெய்யபிஷேகஞ் செய்தால் இருபத்தொரு தலைமுறையிலுள்ள எல்லோரும் சிவபதத்தை யடைவர்.
கை இயந்திரத்தாலுண்டான தைலத்தை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தையடையலாம்.
பால் அபிஷேகஞ் செய்தால் அலங்காரஞ் செய்யப்பட்ட அளவில்லாத பசுக்களைத் தானஞ்செய்த பலன் கிடைக்கும்.
தயிரபிஷேகஞ்செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்கி முடிவில் சிவபதங் கிடைக்கும்.
தேன் அபிஷேகஞ் செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்குவதுடன் அக்கினிலோகத்தையடைதலும் ஏற்படும்.
கருப்பஞ்சாரபிஷேகஞ் செய்தால் வித்தியாதரருடைய உலகத்தையடையலாம்.
பச்சைக்கற்பூரம் அகிலென்னுமிவற்றுடன் கூடின நீரை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தை அடையலாம்.
வாசனையுடன் கூடின சந்தனாபிஷேகஞ் செய்தால் கந்தர்வலோகத்தை அடையலாம்.
புஷ்பத்தோடு கூடிய நீரால் அபிஷேகஞ் செய்தால் சூரிய லோகத்தையடையலாம்.
சுவர்ணத்தோடு கூடிய நீரின் அபிஷேத்தால் குபேரலோகத்தையும், இரத்தினத்தோடு கூடிய நீரின் அபிஷேகத்தால் இந்திரலோகத்தையும், தருப்பையோடு கூடிய நீரின் அபிஷேகத்தால் பிரம்மலோகத்தையும் அடையலாம்.

குறிக்கப்பட்ட திரவியங்கள் கிடையாவிடில் ஆடையால் பரிசுத்தமான சுத்த ஜலத்தால் அபிஷேகஞ் செய்யவேண்டும். இவ்வாறு செய்தாலும் எல்லா விருப்பங்களும் நிறைவேறக்கூடிய வருணலோகத்தை அடைதல் கூடும்.

ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி.

ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் நீங்கள் தெரிந்து செய்த பாவங்கள், தெரியாமல் செய்த பாவங்கள், அறிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள், வாயால் பேசிய பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு, சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும்.
அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும். இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு அவை இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.
இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும், அதன் வலு இழந்துபோய்விடும்.
இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். இதனால், சனிபகவானின் தொல்லைகள் கூட நம்மைத் தாக்காது .(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி முதலிய எல்லா சனிதோஷமும் இதில் அடங்கும்)

...

ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் "ஹைந்தவ திருவலம்" தகவல்களுக்கு மிக்க நன்றி.

5 comments:

  1. உங்கள் உயர்ந்த சேவைக்கு, எம்பெருமான் அண்ணாமலையாரின் அருள் முழுமையாக கிடைக்கப்பெறுவீர். உங்கள் உயர்ந்த சேவை தொடரட்டும்.

    ReplyDelete