Sunday, August 30, 2015

பைரவசக்தி ..... ॐ भ्रं भैरवाय नमः


பைரவசக்தி என்பது காலம் காலமாய் தொடர்ந்து இம்மண்ணுலகில் வாழும் உயிர்களை காத்துக்கொண்டிருக்கிறது. இந்த சக்தியின் வேகம், இதன் மயிர்கூச்செறியும் ஆற்றல், அதனால் உடலில், உள்ளத்தில் ஏற்படும் மாற்றம் பிரமிக்கவைக்கிறது. எவர் தம்மை அழைத்தாலும் பாரபட்சமின்றி நொடிப்பொழுதில் தம் தன்மையை காண்பிக்கும் இதன் வல்லமை நினைக்கவே பிரம்மாண்டமாய் உள்ளது. பைரவரை வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பாக பைரவர் தரும் பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும்.
இது யாம் எமது அனுபவத்தில் கண்ட உண்மை.

காலபைரவர் துதி :

விரித்த பல்கதிர் கொள்சூலம் வெடிபடு தமருகம் கை,
தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகிவேழம்,
உரித்து உமை அஞ்சக்கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச்,
சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரை.

- திருநாவுக்கரசர் .

குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன்,
மருது கீறி ஊடு போன மால், அயனும் அறியா,
சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா, சோதி; எம் ஆதியான்,
கருது கோவில், எதிர்கொள்பாடி என்பது அடைவோமே!

.....

பைரவ ஸ்தோத்ரம் .. भैरव स्तोत्र

भैरव सर्वफलप्रद स्तोत्र ...

ॐ भं भैरवाय अनिष्ट निवारणाय स्वाहा ।
मम सर्वेग्रहाः अनिष्ट निवारणाय स्वाहा ।
ज्ञानं देहि, धनं देहि मम द्रारिद्रयं दुखं निवारणाय स्वाहा ।
सुतं देहि यशं देहि मम गृह क्लेशं निवारणाय स्वाहा
स्वास्थ्य देहि बलं देहि मम् शत्रु निवारणाय स्वाहा
सिद्धं देहि जयं देहि मम् सर्वेॠण निवारणाय स्वाहा
ॐ भं भैरवाय अनिष्ट निवारणाय स्वाहा

பைரவ ஸர்வப²லப்ரத³ ஸ்தோத்ரம்

ஓம் பம் பைரவாய அனிஷ்ட நிவாரணாய ஸ்வாஹா |
மம ஸர்வேக்³ரஹா: அனிஷ்ட நிவாரணாய ஸ்வாஹா |
ஜ்ஞானம் தே³ஹி, தனம் தே³ஹி மம த்³ராரித்³ரயம் து³க²ம் நிவாரணாய ஸ்வாஹா |
ஸுதம் தே³ஹி யஸ²ம் தே³ஹி மம க்³ருஹ க்லேஷ²ம் நிவாரணாய ஸ்வாஹா
ஸ்வாஸ்த்²ய தே³ஹி ப³லம் தே³ஹி மம ஸ²த்ரு நிவாரணாய ஸ்வாஹா
ஸித்³தம் தே³ஹி ஜயம் தே³ஹி மம் ஸர்வேரூ'ண: நிவாரணாய ஸ்வாஹா
ஓம் பம் பைரவாய அனிஷ்ட நிவாரணாய ஸ்வாஹா


சொர்ண பைரவருக்கு 1008 திருப்பெயர்கள் உள்ளன.
அவற்றில் மிக முக்கியமான 12 சொர்ண பைரவர் திருப்பெயர்கள் ...

1. ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ
2. ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ
3. ஓம் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நமஹ
4. ஓம் பக்தப்ரிய நமஹ
5. ஓம் பக்த வச்ய நமஹ
6. ஓம் பக்தாபீஷ்ட பலப்ரத நமஹ
7. ஓம் ஸித்தித நமஹ
8. ஓம் கருணாமூர்த்தி நமஹ
9. ஓம் பக்தாபீஷ்ட ப்ரபூரக நமஹ
10. ஓம் நிதிஸித்திப்ரத நமஹ
11. ஓம் ஸ்வர்ண ஸித்தித நமஹ
12. ஓம் ரசஸித்தித நமஹ


வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நன்மை தரும் நமச்சிவாய நாமம் ..... சிவ பஞ்சாட்சாரம்

ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய சிவ பஞ்சாட்சார ஸ்தோத்திரம் ..... ஓம் நமச்சிவாய

நாக உலகத்திற்கரசனாம் வாசுகியை நளினமுற அணிந்தவனும்
தேகமெலாம் வெண்ணீறு உடையவனும்
திரினயணம் கொண்ட திகம்பரனும்
போகமுடி தேவர்க் கீசனும், புனித மகேஸ்வரனும்,
நித்தியனும் ஆகவந்த ஐந்தெழுத்து மந்திரத்தில் அடிபணியும் முதல் எழுத்தே 'ந' என்றாகும்.

மந்தாகினி நீரைச் சந்தனமாய் மார்புரம் தரித்தவனும்,
மந்தாரை மலர் பலவாய் வழிபட்ட மகேஸ்வரனும்,
நந்தி தேவ கணத்திற்கெல்லாம் நாயகனாய் வழி நடத்த வந்துதித் தோன்
ஐந்தெழுத்தில் வணங்கும் 'ம' வே இரண்டும் நிலையாகும்.

சிவனையும், உமையவள் கமலமுகம் செம்மையுற மலரவரும் சூரியனுமாய்த் தவ ஞான வேள்வி செய்த தட்சனது யாகமதை அழித்தவனும்,
யுவராஜ நீலகண்டன் காலைக் கொடியுடைவனும் -
ஐந்தெழுத்தில் சிவ ராஜ யோகம் மிகும் 'சி' கரமாகும் சிரம் வணங்கும் மூன்றாவதாகும்.

வரங்கொண்ட மாமுனிவர் வசிஷ்டர் - அகத்தியர் , கௌதமரும்,
தரங்கொண்ட வானுறையும் தேவரும் தலை வணங்கும் கங்கை தனை சிரம் கொண்டும்,
ரவி - மதி - அக்கினியைச் சிவனுடைய
முக்கண்ணாய் ஒளிர விடும் அரண் கொண்ட ஐந்தெழுத்தில் அருள் வடிவாம் 'வ' கரமே நான்காகும்.

யட்ச வடிவினாய், சடை முடி தரித்தவனாய்,
யாண்டும் அழியாத் தெய்வீகப் பேரொளியாய்
மெச்சும் உயர் பிளகவில்லுடையோனாய்
மேவும் திக்கெல்லாம் மேனி நிறை உடை அணிவோனாய்ப்
பட்சமில்லா பரஞ்சோதி சொரூபனாய்ப் பாங்கு நிறை
ஐந்தெழுத்தில் பதிவாகும் அட்சரமாம் 'ய' கரணமய ஐந்தாகும்
அடிபணிவோம், நமச்சிவாய ஓம் .

பல சுருதி:

இவ்வைந்தெழுத்து துதியினை தவ நெறி முறையோடு எவரொருவர் தவறாது சொல்வார் எனில் பவரோக வினை நீங்கிப் பாவமெல்லாம் பறந்தோடச் சிவ போக சாம்ராஜ்யம் சிறப்புற பெற்றுய்வரே.


शिवपञ्चाक्षरस्तोत्रम् ..... (श्री शंकराचर्यकृतं)

नागेन्द्रहाराय त्रिलोचनाय
भस्माङ्गरागाय महेश्वराय ।
नित्याय शुद्धाय दिगंबराय
तस्मै नकाराय नमश्शिवाय ॥ १ ॥

मन्दाकिनीसलिलचन्दनचर्चिताय
नन्दीश्वरप्रमथनाथ महेश्वराय ।
मन्दारपुष्पबहुपुष्पसुपूजिताय
तस्मै मकाराय नमश्शिवाय ॥ २ ॥

शिवाय गौरीवदनाब्जवृन्द-
सूर्याय दक्षाध्वरनाशकाय ।
श्रीनीलकण्ठायवृषध्वजाय
तस्मै शिकाराय नमश्शिवाय ॥ ३ ॥

वसिष्ठकुंभोद्भवगौतमार्य-
मुनीन्द्रदेवार्चित शेखराय ।
चन्द्रार्क वैश्वानरलोचनाय
तस्मै वकाराय नमश्शिवाय ॥ ४ ॥

यक्षस्वरूपाय जटाधराय
पिनाकहस्ताय सनातनाय ।
दिव्याय देवाय दिगंबराय
तस्मै यकाराय नमश्शिवाय ॥ ५ ॥

पञ्चाक्षरमिदं पुण्यं
यः पठेत् शिवसन्निधौ ।
शिवलोकमवाप्नोति
शिवेन सह मोदते ॥ ६ ॥

குருவார பிரதோஷ மகிமை ...



வியாழனன்று பிரதோஷ வழிபாடு அமைதல் குருகுந்தள சக்திகளை, உத்தமர்களின் நல்ஆசி நிரம்பிய நல்வரங்களாகப் பெற்றுத் தருவதாகும்.

குந்தளம் எனில் முன்னும். இருப்பும், பின்னுமாகப் பொலிந்து நல்வரங்கள் நன்கு விருத்தி அடைய உதவுவதாகும்.

உதாரணமாக குருவாரப் பிரதோஷ பூஜா பலன்கள்,
முன்னுமாக - முன்னோர்களின் நன்னிலைகளுக்கும்,
இருப்பாக - அதாவது நடப்பு வாழ்வு வாழ்விற்கும்,
பின்னுமாக - வருங்காலச் சந்ததிகளுக்கும் நல்ல பலன்களைப் பெற்றுத் தருவதாகும்.

பிரதோஷ பூஜையின் மகத்துவம் யாதெனில், இதில் திரள்வது புண்ய சக்திகள் மட்டுமல்ல, இறைவனே பிரதோஷ நேரத்தில் திருநடனக் காட்சி அளிப்பதால், நடராஜத் தத்துவமாகிய - அனைத்தும் எப்போதும் இறையருளால் இயங்குவதே! - என்ற பேருண்மையை நன்கு உணர்த்துவதாகும்.

பிரதோஷ பூஜையில் பங்கு கொண்டேன் என்று பலரும் சொல்வார்கள்.

எவ்வகையில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகச் சில ஆன்ம சாதனங்கள் இங்கு அளிக்கப்படுகின்றன.

* வில்வம், புஷ்பம், கற்பூரம், அருகம்புல், தர்பை எடுத்துச் சென்று இறைவனுக்கு அளித்தல்.
* சுவாமியைப் பல்லாக்கில் தூக்கி வரக் கை கொடுத்து உதவுதல்.
* உடை மற்றும் ஏதேனும் உணவு, கனி பிரசாதத்தைத் தானமாக அளித்தல்.
* வேட்டி, சட்டை அல்லது வேட்டி, துண்டு அணிந்து வணங்குதல். பெண்கள் புனிதமான முறையில் சேலை அணிந்து வணங்குதல் நன்று.
* தமிழ் மறை, தேவ மொழி மறைகளை மாலை நான்கு மணிக்குத் துவங்கி இரவு ஏழு மணி வரை இடைவிடாது ஓதிக் கொண்டிருத்தல்.
* மாலை நான்கு மணி முதல் ஏழு மணிவரையேனும் - இறைத் துதி ஓதுதலைத் தவிர - ஏனைய வகையில் மெளனம் பூணுதல்.
* பிரதோஷப் பூஜைக்குக் குடும்பத்தாருடன் சென்று வணங்குதல்.
* அடிப் பிரதட்சிணம், உயரக் கை கூப்பிய நிலைப் பிரதட்சிணம், இயன்றால் அங்கப் பிரதட்சிணம் ஆற்றுதல்
- இவ்வாறாக, பல்வகைகளில் ஆன்ம சாதனங்களுடன் இறைவனை, பிரதோஷ நாளில் வழிபடுதல் வேண்டும்.

பிரதோஷ மூர்த்தி பவனி வருகையில் அவருடன் சேர்ந்து மறைத் துதிகளை ஓதிக் கொண்டே வலம் வருதல் சிறப்புடையது.

வியாழக் கிழமையில் கூடும் பிரதோஷம் குருசுதாயப் பிரதோஷமாகப் போற்றப்படுகின்றது. யாக்ஞவல்கியர் தம் குருவின் ஆணையாக குருகுல பர்ணசாலையில் இருந்து தலயாத்திரை பூண்ட போது, ஒவ்வொரு குருவாரப் பிரதோஷத்திலும், சூரியநாராயண மூர்த்தியே தோன்றி குருசுதாய சக்திகளை அளித்து அரவணைத்திட்டார். இதனால்தாம் இன்றும் சூரிய மண்டலத்தில் பிரதோஷ காலத்தில், யாக்ஞவல்கிய மஹரிஷி சிவபூஜை ஆற்றுகின்றார். இன்றையப் பிரதோஷ நேரத்தில், மாலைச் சூரியனையும் யாக்ஞவல்கிய மஹரிஷியின் நினைவோடு ஆலயத்தில் இருந்தவாறே தரிசித்து, சிவபூஜை ஆற்றுதல் மிகவும் விசேஷமானது. பிள்ளைகளிடம் கொண்டுள்ள கருத்து வேறுபாடுகள் அகல, குருவாரப் பிரதோஷ நாளில் ஆறு அல்லது ஒன்பது சுற்று முறுக்குகளைப் படைத்துத் தானமாக அளித்து சிவபூஜை ஆற்றிடுக!

..... என் ஆத்மார்த்த குரு திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் அவர்களின் தெய்வ வாக்குப் பொக்கிஷங்கள்

Tuesday, August 18, 2015

திருச்செந்தூர் - தீர்த்தங்களின் மகிமை

.....

காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் திருச்செந்தூர் தலத்தில் தீர்த்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றில், கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக் கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.

கடற்கரையில் அமைந்திருந்த சில தீர்த்த கிணறுகள் மணல் மூடி தூர்ந்துவிட்டன. அந்தத் தீர்த்தக் கட்டங்களைக் குறிப்பிடும் கல்வெட்டுகளும் காணாமல் போய்விட்டனவாம்.


முகாரம்ப தீர்த்தம்:
இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப் பருகுவர்.

தெய்வானை தீர்த்தம்:
இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.

வள்ளி தீர்த்தம்:
இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத் துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.

லட்சுமி தீர்த்தம்:
இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர், குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப்பெறுவர்.

சித்தர் தீர்த்தம்:
காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக, பைசாசு என்கிற பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.

திக்கு பாலகர் தீர்த்தம்:
கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனைத் தரும்.

காயத்ரீ தீர்த்தம்:
அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் அருளும்.

சாவித்ரி தீர்த்தம்:
பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன் னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.

சரஸ்வதி தீர்த்தம்:
சகல ஆகம புராணங்க ளையும் அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.

அயிராவத தீர்த்தம்:
சந்திர பதாகை முதலிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.

வயிரவ தீர்த்தம்:
இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் பல புண்ணிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.

துர்கை தீர்த்தம்:
சகல துன்பங்களும் நீங்கி நன்மைகிட்டும்.

ஞானதீர்த்தம்:
இறைவனைப் பரவுவோருக்கும் பரவு வதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.

சத்திய தீர்த்தம்:
களவு, கள்ளுண்டல், குரு நிந்தை, அகங்காரம், காமம், பகை, சோம்பல், பாதகம், அதிபாதகம், மகா பாதகம் ஆகியவற்றினின்றும் நீக்கி, சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.

தரும தீர்த்தம்:
தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும்.

முனிவர் தீர்த்தம்:
மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக் கண்ட பலனைப் பெறுவர்.

தேவர் தீர்த்தம்:
காமம், குரோதம், லோபம் மோகம் போன்ற ஆறு குற்றங்களை நீக்கி, ஞான அமுதத்தை நல்கும்.

பாவநாச தீர்த்தம்:
சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த்தங்களையும் அளிக்கவல்லது.

கந்தபுட்கரணி தீர்த்தம்:
சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசை சூடும் மேன்மையைப் பெறுவர்.

கங்கா தீர்த்தம்:
இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தெப்பம் போன்றிருக்கும்.

சேது தீர்த்தம்:
சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருள வல்லது.

கந்தமாதன தீர்த்தம்:
இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.

மாதுரு தீர்த்தம்:
இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.

தென்புலத்தார் தீர்த்தம்:
இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளும் தண்ணீரும் இறைத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட் கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.


..... வினோத் குருக்கள் @ "மழைக்காகிதம்"


Friday, August 14, 2015

Aadi Velli ..


Sri Lalitha Sahasranamam recital at home and Bahu's at her place.

Questions I intend to explore ..

..

What gives life meaning?

What promotes happiness, well-being, and thriving?

What motivates me to get out of bed in the morning?

To persevere in the face of life’s difficulties and challenges?

How can we, both individually and collectively, learn to live better lives?

Is it possible to change my life?

Can I change the outer aspects of my life by changing the inner attitudes of my mind?

To discover and learn on what works and what doesn’t to alter my life?

Can I have the power to change my life, and your life, to live with more zest, health, happiness, achievement, love, and meaning.

Why do I want to make this change? What will it do for me?

What will I need to release and let go of in order to make this change?

What barriers stop me from being more?

In what ways, or in what activities or environments, do I feel insecure?


Peering through the Lens of Science (with additional inputs from wisdom, experience and thought), these are the questions I intend to explore and pen it down in my blog.

Wednesday, August 12, 2015

Back in the Saddle


 

After 17 months, back in the Saddle.

இன்று முதல் என்னுடைய வலைப்பூ பதிவு தொடர்கிறது ....

நான் தொடங்கும் சகல காரியங்களிலும் எந்தவித விக்கினங்களும் ஏற்படாமல் நிறைவேறுவதற்காக, வேண்டியவருக்கு வேண்டிய வரம் அருளும் வள்ளல் விநாயகர், ஆத்மார்த்த ஆப்த சிநேகிதரான முழுமுதற்க் கடவுளான பிள்ளையார், ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடி கொண்டு யானை முகமும், பெருத்த தொந்தியும் வாய்ந்தவரான ஸ்ரீ கற்பக மூர்த்தியை வணங்குகிறேன்.

ஸ்ரீ கற்பக விநாயகர் எனக்கு மங்களம் தந்தருள்க.
ஸ்ரீ ஆறுமுக பெருமான் எனக்கு மங்களம் தந்தருள்க.
ஸ்ரீ வாலாம்பிகா எனக்கு மங்களம் தந்தருள்க.
ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் எனக்கு மங்களம் தந்தருள்க.
ஸ்ரீ மாந்துறைக்கருப்பர் எனக்கு மங்களம் தந்தருள்க.

என்னைக் காக்கும் விநாயகனே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.

என்னை வாழவைக்கும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் வழிநடத்தும் என் குலதெய்வத்தின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

என்னைக் காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் 'அருள்மிகு கருப்பண்ண சுவாமி' திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி - குருவுக்கும் குருவான பெரிய குரு, ஆதி குரு.
ஸர்வேஸ்வரா, உனக்கு என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

பரமகுருவான நந்திதேவர் திருவடிகள் சரணம்.

ஸ்ரீமாதா லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய மகரிஷி திருவடிகள் சரணம்.

என் குலகுரு சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பாத கமலங்களுக்கு என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

என் ஆத்மார்த்த குரு திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் திருவடியே போற்றி.
குருவுக்கும் குரு பராபர குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ மஹரிஷி மஹேஸ்வராய கெளஸ்துப புருஷாய ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் திருவடியே போற்றி, போற்றி.

என்னை பெற்ற தாய் தந்தை போற்றி போற்றி.


அன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். Salutations to all my Blog-Readers.

... என்றும் அன்புடனும் அடியேன் ஸுப்ரஹ்மண்ய ஸ்ரீநிவாசன்