Sunday, December 17, 2017

சுகம் தரும் ஸுந்தரகாண்டம்


கும்பமுனி ஸ்ரீ அகஸ்திய மகரிஷி, நாடியில் ஹனுமந்ததாசன் அவர்களுக்கு வால்மீகி எழுதிய ராமாயணத்தில் "ஸ்ரீ ராம சரிதையின்" சக்தி மிகுந்த ஸ்லோகங்களை சுட்டிக்காட்டி, எந்த எந்த சர்கங்கள், எப்படிப்பட்ட பிரச்சினைகளை கடந்துவர ஒரு மனிதனுக்கு உதவி செய்யும் என்பதை தெளிவாக கூறியுள்ளார்.

மேலும், "இதை நம்பி பாராயணம் செய்பவர்கள் நிச்சயமாக தங்கள் கர்மாவை கடந்துவிடுவார்கள். இது ஸ்ரீராமர், ஸ்ரீ அனுமன் அருளால் அடியேன் அகத்தியனுடைய வாக்கு. அதுதான் இறைவன் சித்தம்" என்று அருளியுள்ளார்.

"அஞ்சனை மைந்தனை ஸ்ரீராமபிரான் வெகுவாக நம்பினார். இதை அனுமனும் உணர்ந்திருந்தார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் இருக்கவேண்டும் என்று அனுமனும் தன்சக்தியை உணர்ந்து செயல்பட்டார். அத்தனை கவனத்துடன், அனுமன் செயல்பட்ட விதம், அவர் செய்த லீலைகள், தூதுவனுக்குரிய குணங்கள், என்னால் முடியும் என்கிற நம்பிக்கை, ஸ்ரீராம சேவையே என் பிறப்பின் அர்த்தம், ஸ்ரீராம தாசத்துவம், அவர் செய்த ஜபம், த்யானம் போன்றவை, பின்னால் முனிவர்களால் மந்திர உருவில் போற்றப்பட்ட பொழுது, இறை கனிந்து தன் அருளை அந்த மந்திரத்திற்குள் புகுத்தி, இன்றும் மனித இனம் அதை பாராயணம் செய்தால் பலனை, இறை அருளை பெற்றுக் கொள்ளட்டும் என்று தீர்மானித்ததை, அடியேனும் கண்கூடாக பார்த்தேன். ஒவ்வொரு மிக சிறந்த நிகழ்ச்சிக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும்.

சுந்தரகாண்டம் அனுமனின் லீலைகளாயினும், இன்றும் பலம் மிகுந்து, அருள் நிறைந்த, சிறந்த பலனளிக்க கூடிய ஒரு காண்டமாக இருக்க காரணமே, அதனுள் உறைந்திருக்கும், ஸ்ரீராமனின் ஆசிர்வாதம்தான். இது மட்டும் மனிதனுக்கு புரிந்தால் போதும், அவன் தன் வாழ்க்கையை நல்ல பாதையை நோக்கி திருப்பி விடலாம்" என்று நாடியில் கூறியுள்ளார்.


"ஸ்ரீராம சரிதையை வால்மீகி ஏழு காண்டங்களாக விவரித்துள்ளார். எனினும், இறையே இந்த சுந்தரகாண்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. நவகிரக தசை, திசா புக்தியில் சிரமப்படுகிறவர்கள், அப்படிப்பட்ட தாங்க முடியாத பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு இறைவன் திருவடியை சேர, இறைவனே காட்டிக்கொடுத்த மகா புண்ணிய வழி. கர்மாவுக்கு ஏற்றவாறு தண்டனையை இறைவனே கொடுத்தாலும், அதுவே மனம் விரும்பி திருந்தி வாழ நினைக்கும் மனிதர்களுக்கு, மாற்று வழியை காட்ட கால காலமாக யோசித்துக் கொண்டிருந்தது என்பது, சித்தர்களாகிய எங்களுக்கு இப்பொழுதுதான் புரிய வந்தது. இதை கைப்பற்றி, மனம் ஒன்றி, தன்னையே இறைவனுக்கு கொடுப்பவனுக்கு, விடுதலை நிச்சயம். நினைத்தது நிறைவேறும்" என்று நாடியில் கூறியுள்ளார்.

அனுமனை பெருமைப்படுத்த சுந்தரகாண்டம் உருவானது. ராமாயணத்தின் மற்ற காண்டங்களில், இறைவனே மனித அவதாரம் எடுத்தால் எப்படிப்பட்ட கர்ம வினையையும் தாங்கித்தான் கடந்து வரவேண்டும் என்று உணர வைத்த இறைவன், தன் தாசனை பணிந்து, அவர் செய்த அரிய விஷயங்களை பாராயணம் செய்வதின் மூலம், மனித இனத்தின் பிரச்சினைகளை விலக்க வழிகாட்டியுள்ளார்.


நம் அனைவரின் பிரச்சினைக்கும், இறைவன் உத்தரவால், அகத்தியப்பெருமான் எந்தெந்த ஸ்லோகங்களை கூறி வந்தால் பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறலாம் என்று நாடியில் ஹனுமந்ததாசன் அவர்களுக்கு கூறியுள்ளார்.

ஹனுமந்ததாசன் ஸ்வாமிகள் நாடியில் நடந்த நிகழ்ச்சிகளை திரு.கார்த்திகேயன் அவர்களிடம் தெரிவித்திருந்தார். திரு. கார்த்திகேயன் சற்று உள்வாங்கி படித்து, நடைமுறைப்படுத்தி, தனது 'அகத்தியப்பெருமானின் "சித்தன் அருள்"' என்ற வலைப்பூவில் தொகுத்து அளித்துள்ளார்.

இந்த தொகுப்பில், என்னென்ன தசைகள் நடந்தால் என்னென்ன பிரச்சினைகள் வந்தால் சுந்தர காண்டத்திலுள்ள எந்த ஸ்லோகத்தைச் சொன்னால் நற்பலன் கிடைக்கும் என்பது குறிப்பிட்டுள்ளது.

அடியேன் அந்த வலைப்பூவில் படித்த ஆக்கங்களை இங்கு என்னுடைய "KOSHASRINI" வலைப்பூவில் ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.

இதை வாசிக்கும் அனைவருடைய பிரச்சினைகளும் விலகி, அனைவரும் கும்பமுனி ஸ்ரீ அகஸ்திய மகரிஷி அருளால், எல்லா நலமும் பெற்று, வளமும் பெற்று, சிறந்த வழிகாட்டுதல் அமைந்து, மேன்மேலும் உயர்நிலை அடைந்திட வாழ்த்துகிறேன், வேண்டிக் கொள்கிறேன்.



அற்புதமான சுந்தர காண்டம் பற்றிய அழகான ஸ்லோகம் இது.

ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

அழகான சுந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு; அன்னை சீதா அழகு; சுந்தர காண்டம் கதை அழகு; அசோகவனம் அழகு; வானரர்கள் அழகு; சுந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு; நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு; காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு. சுந்தர காண்டத்தில் எல்லாமே அழகுதான்!

சுந்தரகாண்டத்தின் எந்த ஸ்லோகத்தையும் எவன் எந்த நல்ல ஒரு விஷயத்துக்காக வாசித்தாலும், அப்படி பாராயணம் பண்ணுகிற நேரத்தில், அவன் தான் அறிந்தோ அறியாமலோ, அந்த இறையாக மாறிவிடமுடியும், இறையை உணர முடியும்.

"நமோஸ்து வாசஸ்பதயே ஸ்வஜ்ரிணே ஸ்வயம்புவே
சைவ ஹூதாஸனாயச|
தானே சோக்தம் யதிதம் மாமக்ரோத வனெள
கஸா தச்ச ததாஸ்து நான்யதா!!
என்கிற இந்த ஸ்லோகத்தை யார் சொன்னாலும், அநேக நன்மைகளை பெற்று வாழ்வார்கள். சுந்தரகாண்டத்தில் சொல்லப்பட்டுள்ள மிக மிக முக்கியமான ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.


சர்கம் 1
"ஏழரைச் சனி ஆரம்பமானவர்களுக்கும், அஷ்டம சனியால் பீடிக்கப்பட்டவர்களுக்கும், சனி மகா தசையில் கேது புக்தியோ, கேது தசையில் சனி புக்தியோ நடப்பவர்களுக்கும், சுந்தரகாண்டத்தின் முதல் சர்க்கத்தை (அத்தியாயத்தில் உள்ள ஸ்லோகங்களை) தினம் பாராயணம் செய்தால், அந்த கஷ்டங்கள் நீங்கிவிடும். அவர்கள் மனதில் அச்சம் என்பதே இருக்காது".

Chapter 3 ... Overcome effects of devils, ghost, spirits

சர்கம் 5.6.7
'நேர்மையாக முயற்சி செய்தால் வெற்றி அடையலாம் என்றாலும், எந்த கிரகங்களினாலும் எந்த இடையூறு வந்தாலும் மனிதர்கள் அனைவரும் சுந்தரகாண்டத்திலுள்ள ஐந்து, ஆறு, ஏழாவது சர்க்கத்தை தினம் பாராயணம் பண்ணி வந்தால், நினைத்த காரியம் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் நடக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இதற்காகவே எழுதப்பட்டது இந்த சர்கங்கள் என்பது, ஆன்றோர் வாக்கு".

சர்கம் 1.2.3.4.5.6.7.8.9
"நம்பிக்கைதான் வாழ்க்கை எனினும், சுந்தரகாண்டத்தின் ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள சரகத்தையும் விடாமல் தினம் படித்து வருபவர்களுக்கு, ராகு, கேது, சனி ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து நிரந்தர விடிவு கிடைக்கும். இது சாத்தியமான உண்மை.
நாக/சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், ப்ரம்ம ஹத்தி தோஷம் மேற்சொன்ன சர்கங்களை தினம் வாசித்து வருவதால், நிவர்த்தியாகும்.

சர்கம் 10.11.12.13
"மனிதன் முயற்சி செய்யும் பொழுது இடையூறு வரத்தான் செய்யும். அதையும் தாண்டி செல்கிற மன தைரியம் அவனுக்கு வேண்டும். சுந்தரகாண்டத்தின் பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதிமூன்று சர்கங்களில் உள்ள 195 ஸ்லோகங்களையும் பாராயணம் செய்து வருபவர்களுக்கு, அனுமனே அதை அருளுவார், அனைத்து தடைகளும் நீங்கிவிடும் என்பது சத்தியம்." 

சர்கம் 14
"ராகு, சனி, கேது, குரு" ஆகிய நான்கு கிரகங்களும் அஷ்டமத்தில் இருந்து ஆட்டிவைக்கும் பொழுது, சங்கடங்களையும், மனக்கலக்கத்தையும், எப்பேர்பட்டவர்களும் சந்திக்க வேண்டிவரும். அப்படிப்பட்ட அத்தனை பேர்களும், வேலைக்கு முயற்சி செய்யும் இளைஞ்சர்கள், திருமணம் இன்னும் நடக்கவில்லையே என்று மனதிற்குள் குமரிக்கொண்டிருக்கும் யுவதிகள், பணத்தட்டுப்பாடு கொண்டு எப்படி வாழப் போகிறேன் என்று துடி துடிக்கும் சம்சாரிகள், அத்தனை பேர்களும் கண்டிப்பாக இந்த சுந்தர காண்டத்திலுள்ள பதினான்கு சர்க்கங்களையும் படித்து வந்தால் மிகப் பெரிய எதிர்காலம் சீக்கிரமே கிடைக்கும், அதையும் அனுமனே தருவார், இது நிச்சயம்!"
"பதிநான்காவது சர்க்கத்தை தினமும் பாராயணம் பண்ணி, ஒரு மனிதன் தன் பிரார்த்தனையை இறைவனிடம் சமர்ப்பித்துவிட்டால், இறை அருள், எந்த காரியத்தையும் சாதிக்க வைக்கும்.

Chapter 15 ... To gain wealth and happiness
Chapter 16 ... To attain detachment from worldly life

சர்கம் 18
"ஜாதக ரீதியாக தொட்டதெல்லாம் தடங்கல் ஆகிக்கொண்டிருப்பவர்களும், சுபகாரியமான திருமணம், சீமந்தம் நடக்காமல் தடைப்பட்டுக் கொண்டிருக்கும் குடும்பத்தினர்களும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க துடிப்பவர்களும், அஷ்டம சனியினால் பாதிக்கப்பட்டவர்களும், ராகு, கேது தோஷங்களில் பீடிக்கப்பட்டவர்களும், சனி மகா தசையில் ராகு, கேது புத்தி நடப்பவர்களும் வறுமையில் வாடுபவர்களும், இந்த சுந்தரகாண்டத்தின் பதினெட்டாவது சர்க்கத்திலுள்ள ஸ்லோகங்களை விடாது படித்து வந்தால், அனைத்து சிரமங்களும், அனுமன் அருளினால் விலகும்".

Chapter 19 ... To realise God and become one capable of sweet words
Chapter 20 and 21 ... For good behavior

சர்கம் 23.24.25.26
இருபத்து மூன்று முதல் இருபத்தி ஆறாவது வரையுள்ள நான்கு சர்கங்களில், வால்மீகி பெண்மைக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும், அதனால் அடைகிற துன்பங்களையும் விவரித்து கூறியுள்ளார். விவாகரத்து செய்ய நினைப்பவர்கள், கணவனை விட்டு பிரிந்து வாழ்பவர்கள், வெளியுலக வட்டாரத்தில் மற்ற சக நபர்களால் விரட்டப்படும் பெண்களுக்கும், தங்கள் ராசியில் ஏழாமிடத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது உள்ள பெண்களுக்கும், அந்த களத்திர அஷ்டம ஸ்தானக் கொடுமையிலிருந்து நீங்க; ஆறாமிடத்து பாவம் பலமற்று செயல்பட இந்த நான்கு சர்கங்களையும், அப்படியே பட்டாபிஷேக சர்கத்தையும் படித்தால், துயரம் விலகும், கணவர் கிடைப்பார், இல்லற வாழ்க்கை மேலும் இனிமையாகும்.

Chapter 27 ... To get rid of bad dreams

சர்கம் 29
"இருபத்தி ஒன்பதாவது சர்கத்தில், எட்டு ஸ்லோகங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் நல்ல சகுனங்கள் எவை, எவை என்பதை மனிதனுக்கு உணர்த்தும்."

சர்கம் 30
"தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேற்றுமை நீங்க, பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர, குடும்பத்தில் ஏற்படும் மற்ற அனைத்து கஷ்டங்கள், மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கும் நோயாளிகள் சுகம் பெற, அத்தனை பேர்களும் இந்த சுந்தரகாண்டத்திலுள்ள 30வது சர்க்கத்தை தினமும் மூன்று தடவை, அனுமனை நினைத்துக் காலையில் பாராயணம் செய்து வந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். சந்திர மகா தசையில் ராகு, கேது புக்தி நடப்பவர்கள், ராகு மகா தசையில் சந்திர புக்தி, சூரிய புக்தி நடப்பவர்கள், கேது தசையில் சந்திரன், செவ்வாய், சூரிய  புக்தி நடப்பவர்கள், ஆகியோருக்கு இந்த முப்பதாவது சரகம் நல்ல உயரிய வாழ்வுதனை அள்ளிக்கொடுக்கும்."

சர்கம் 31.32.33.34.35
"முப்பத்தி ஒன்று முதல், முப்பத்தி ஐந்தாவது சர்கம் வரையில் உள்ள ஸ்லோகங்களை தினமும் பாராயணம் செய்வதால், கீழ் காணும் சிரமங்கள் அனைவருக்கும் விலகும்.
கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்கிறவர்கள் அனுமனின் ஸ்ரீராம சரிதத்தை தினம் படிப்பது நன்று. வேலை கிடைக்க வேண்டும் என்கிறவர்கள், வாழ்க்கையில் நம்பிக்கை குறைந்தது போகிறவர்கள், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்கிறவர்கள் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் அனைவரும், இந்த சர்கங்களை படித்துக் கொண்டே வந்தால் போதும், துன்பம் அத்தனையும், சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும்." 

சர்கம் 35.36.37.38
"கஷ்டங்கள் தொடர்ந்து பெறுகின்ற அனைத்து மக்களும், ஆபத்தில் துடிப்பவர்களும், வியாதியினால் போராடுபவர்களும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடந்து கொண்டிருப்பவர்களும், அஷ்டம குரு, அஷ்டம கேது, ராகு நடந்து கொண்டிருப்பவர்களும் , திருமணமாகாத ஆண், பெண் இருபாலர்களும் 35, 36, 37, 38 ஆவது சர்கங்கள் உயிரைக் கொடுத்து காப்பாற்றும், கஷ்டங்களை விலக்கி வைத்துவிடும்! சௌபாக்கியங்களை அளிக்கும். இது ஒரு மிக மிக முக்கியமான சௌபாக்கிய பகுதியாகும்".

சர்கம் 39.40.41.42
"மனம் நொந்துபோன மனிதர்களுக்கு முப்பத்தி ஒன்பதாவது சர்கத்தில் உள்ள 53 ஸ்லோகங்கள், ஒரு வரப்பிரசாதம்."
"பயத்தினால் தினம் செத்துக்கொண்டிருப்பவர்களுக்கும், தன்  பலத்தை தானே அறிந்து கொள்ளாதவர்களுக்கும், ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் குரு, கேது, சனி இருந்து அதற்குரிய மகாதசையோ, புக்தியோ, அந்தரமோ நடந்து கொண்டிருப்பவர்களுக்கும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற துர்தேவதைகளால் திடீரென்று பீடிக்கப்பட்டவர்களுக்கும், தோஷங்கள் அனைத்தும் உடனடியாக மறையவும், சந்தோஷங்கள் அதிகரிக்கவும், காவல்துறை, ஜெயில் பயம் விலகவும், முப்பத்தி ஒன்பது முதல் நாற்பத்தி ரெண்டு வரையில் உள்ள சர்கங்களில் உள்ள அனைத்து ஸ்லோகங்களையும், மனதிற்குள் தினம் பாராயணம் செய்து வரலாம். அத்தனை சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள் இவை".

சர்கம் 43.44.45.46
நாற்பத்தி மூன்று முதல், நாற்பத்தி ஆறுவரை உள்ள சர்கங்களை, பட்டாபிஷே சர்க்கத்தோடு படித்து, பாயாசம் நிவேதனம் செய்து வந்தால் அனுமன் போல் பிரகாசிக்கலாம்.
அவை  "ராகு, கேது தோஷம், அஷ்டம சனி, அஷ்டம குரு, கேது இவர்களால் பீடிக்கப்பட்டவர்கள், எதிரிகளால் நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள், எப்பொழுதும் வாழ்க்கையில் தோல்வி அடைந்து கொண்டு இருப்பவர்கள், வாழ்க்கையில் வெற்றி பெற, சாதனை படைக்க, எதிராளியின் கொட்டத்தை அடக்க, இந்த சர்கங்கள் பெரிதும் உதவியாக இருக்கும்".

சர்கம் 47.48.49.50
"துர்தேவதைகளால் பீடிக்கப்பட்டவர்கள், எதையோ கண்டு மிரண்டு, தினம் தினம் பயந்து பயந்து வாழ்கிறவர்கள், சந்திர தசையில் ராகு, கேது புக்தி நடந்து கொண்டிருப்பவர்கள், சூரிய தசையில் கேதுவும், கேதுவோடு சந்திரனும் அஷ்டமத்தில் ராசியாக அமையப்பெற்றவர்கள், கொடும் குணத்திற்குரிய நபர்களோடு வாழ்க்கை, தொழில் நடத்துகிறவர்கள், சந்திராஷ்டமம் வந்த நாளில் அவதியுறுகிறவர்கள், அனைவரும் இந்த நான்கு சர்கங்களை (47-50) படித்து வந்தால், ஆஞ்சநேயர் வந்து அவர்களுக்கு உதவுவார், வாழ்வு கொடுப்பார், எப்பேர்ப்பட்ட துன்பத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும்".

சர்கம் 51.52.53.54
திருடர் பயம், எதிரிகளினால் பயம், போக்கிரிகளால் பயம், அக்னியினால் பயம், ஆகியவற்றினால் தினம் அவதிப்படுகிறவர்களும், கஷ்டத்தினால் மாட்டிக்கொண்டவர்களும், செய்யாத தப்புக்காக தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும், செவ்வாய், கேது இரண்டும் சேர்ந்து எட்டாமிடம், ஆறாமிடத்தில் இருக்கும் ஜாதகர்களும், அஷ்டம திசையாக செவ்வாய் தசை நடந்து கொண்டிருப்பவர்களும், ரசாயனம், அடுப்படியில் வேலை செய்பவர்களும் 51 முதல் 54 வரையுள்ள சுந்தரகாண்ட சர்கத்தை படித்து வந்தால், அவர்களுக்கு, எந்தவித உயிர் ஆபத்தும், ஏற்படாது, தீயால் பாதிக்கப்பட மாட்டார்கள், பயமும் விலகிவிடும்".

சர்கம் 55.56.57
"பரீட்ச்சையில் தோல்வி அடைந்தவர்கள், பதவியை இழந்தவர்கள், விதியினால் கஷ்டப்படுபவர்கள், அஷ்டம குரு, அஷ்டமச்சனி இருக்கிறவர்கள், சனி திசையில் ராகு புக்தி, கேது புக்தி நடக்கிறவர்கள், சூரிய தசையில் கேது, ராகு, சனி புக்தி நடக்கிறவர்கள், நொந்து போன உள்ளத்தோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா என்ற விரக்தியில் நடமாடுபவர்கள், தோல்விகளை தவிர வேறு ஏதும் அறியாத வியாபாரிகள், தொழில் அதிபர்கள், அத்தனை பேர்களும் 55 முதல் 57 வரை உள்ள சர்கங்களை விடாப்பிடியாக தினம் மூன்று தடவை பாராயணம் செய்து பார்த்தால், துன்பம், தோல்வி, பயம், விரக்தி அத்தனையும் தவிடு பொடியாகிவிடும். இது நிரந்தர உண்மை".

சர்கம் 58.59
"58, 59 சர்கங்களை பாராயணம் செய்கிறவர்களுக்கு, இதுவரை செய்த பாபங்களுக்கு எல்லாம் விமோசனம் கிடைக்கும். எதிரிகளை பற்றிய பயம் விலகும். தெய்வ அனுகூலம் நெருங்கி வரும். தடங்கல்கள் ஒவ்வொன்றாக மறையும். சனிதோஷம் விலகும். ராகு, கேதுவினால் ஏற்படும் நோய்கள், கெடுதல்கள் இருக்கிற இடத்தை விட்டு ஒழியும். செய்வினை பலமற்றுப் போகும். தரித்திரம் விலகும். நின்று போன சுபகாரியங்கள் மறுபடியும் நடக்கும். தோல்வி வெற்றியாக மாறும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்".

சர்கம் 60.61
"வாழ்க்கையில் சில முக்கியமான முடிவை எடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களும், நேர்மையாகச் செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களும், வில்லங்கம் இல்லாமல் செயல்பட 60, 61 சர்கங்களை படித்துவிட்டு துணிந்து செயலில் இறங்கலாம்.  சந்தோஷமாகவே எல்லாம் நடக்கும். சூரியனோடு, கேது உள்ள ஜாதக ராசிக்காரர்கள், சந்திரனோடு ராகு இருக்கும் பொழுது பிறந்தவர்கள், முக்கியமான முடிவை குடும்பத்திற்கும், பணிபுரியும் இடத்திற்கும் சொல்லக்கூடிய பொறுப்பில் இருப்பவர்கள், சந்திர திசையில் கேது புக்தி, சூரிய தசையில் ராகு புக்தி நடக்கிறவர்களுக்கும் மேற் கூறிய சர்கங்கள், மறுமலர்ச்சியையும், ஊட்டத்தையும் கொடுக்கும், நல்வழியைக் காட்டும், மனதில் நிம்மதி, சந்தோஷத்தைக் கொடுக்கும்".

சர்கம் 62.63
எதையும் சமமாக நினைத்து வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் என்ற தத்துவத்தை, சுந்தரகாண்டத்தின் 62, 63ம் சர்கத்தில் காணலாம். இந்த 62, 63ம் சர்கத்தை படிப்பவர்கள் அனைவருக்கும் தோல்வி என்பது நெருங்காது, பயம் என்பது இருக்காது, தடங்கல்கள் விலகும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எட்டாம் வீட்டில் கேது, ராகு, குரு இருப்பவர்களும், சனிபகவானால் கஷ்டப்படும் அஷ்டம சனி நடப்பவர்களும், அஷ்டம ராகு நடந்து கொண்டிருப்பவர்களும், கஷ்டம் நீங்கி வாழ்வார்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பயந்து கொண்டிருப்பவர்களுக்கு எம பயம் விலகும். இருதய அறுவை சிகிர்ச்சை, மூளை அறுவை சிகிர்ச்சை வெற்றி அடையும். திருடர்கள், நெருப்பு, இயற்க்கை சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களும், துன்பத்திலிருந்து விடுதலையை நிச்சயம் அடைவார்கள்.

சர்கம் 64
களத்திர ஸ்தானத்தில் ராகு, கேது, செவ்வாய், சனி, சூரியன் ஆகிய கிரகங்கள் இருந்து, அவரவர்கள் மகா புக்தியோ, திசையோ நடப்பவர்கள் 64ஆம் சர்கம் பாராயணம் செய்தால் அத்தனை தோஷத்தையும் விலக்கி, தாம்பத்திய வாழ்க்கையை மலரச் செய்யும். திருமண வாழ்க்கையில் சந்தோசம் இல்லாதவர்கள், பிரிந்துவிட  வேண்டும் என்று வருந்தி தினமும் அல்லற்பட்டுக் கொண்டிருப்பவர்கள், தொழில் நிமித்தம் காரணமாகக் கணவனும் மனைவியும் தனித் தனியாக பிரிந்திருப்பவர்கள், காதல் தோல்வி ஏற்படுமோ என்று அனுதினமும் பயந்து கொண்டிருப்பவர்கள், அத்தனை பேரும் இந்த சர்கத்தை தினம் மூன்று தடவை படித்து வந்தால் போதும், நடக்காத திருமணம் நடக்கும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் விலகும், இல்வாழ்க்கையில் பரிபூரண ஆனந்தத்தை அடைவார்கள்.

சர்கம் 65
சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கவலைப் படுபவர்கள், ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச்சனி நடந்து கொண்டிருக்கும் ஜாதகத்திற்கு சொந்தக்காரர்கள், சந்திரனோடு கேது இருப்பவர்கள், கேது திசையில் சந்திர புக்தி நடப்பவர்கள், ஒவ்வொரு மாதமும் சந்திராஷ்டமத்தில் அவதிப்படுபவர்கள், கணவன் மனைவியை பிரிந்திருப்பவர்கள், விவாகரத்து செய்ய வேண்டும் என்று துடிப்பவர்கள், தூர தேசத்திலிருந்து நல்ல தகவல் வரவில்லை என்று கவலைப்படுபவர்கள், அன்யோன்யமாக பழகத்தடை இருப்பவர்கள், களத்திர தோஷம் உடையவர்கள், செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், இந்த அறுபத்திநான்காவது சர்கத்தையும் முப்பத்தாறாவது சர்கத்தையும் தொடர்ந்து தினம் பாராயணம் செய்து வந்தால், சங்கடங்கள் நீங்கி சௌபாக்கியம் பெறுவார்கள்.

சர்கம் 66.67
வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்தவர்கள், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, விரயச்சனி, ஜென்மச்சனி, பாதச்சனியினால் அவதிப்படுபவர்கள், சனி மகாதிசையில் சுயபுக்தி, சூரிய புக்தி, கேது புக்தி, சந்திர புக்தி, ராகு புக்தி நடப்பவர்கள், சந்திர திசையில் கேது புக்தி, கேது அந்தரம், ராகு புக்தி, ராகு அந்தரம், சனி புக்தி நடப்பவர்கள், செவ்வாயோடு கேது சம்பந்தப்பட்டு ஆறாம் வீட்டில் இருக்கும் ஜாதகவாசிகள், களத்திர செவ்வாய் தோஷத்தை உடையவர்கள் அனைவரும் இந்த அறுபத்தாறு, அறுபத்தேழாம் சர்க்கத்தை தினம் மூன்று தடவை காலையில் பாராயணம் செய்து வந்தால் அவர்களது கஷ்டம் நீங்கும், தலைவிதியே அற்புதமாக மாறும்.

.....
அகத்தியப்பெருமானின் "சித்தன்அருள்" வலைப்பூவிலிருந்து (https://siththanarul.blogspot.in/) பொருக்கி எடுக்கப்பட்டதை ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். வலைப்பதிவர்க்கு மிக்க நன்றி. என்னுடைய ஆக்கங்கள் இல்லை.
.....

The benefits of performing Sundara Kandam Parayanam are umpteen and have been elaborated in Uma Samhita in a conversation between Lord Shiva and Parvathi. The Parayanam can be performed to ward off any problem or obstacles being faced by the individual such as delay in marriage, disturbed marriage, children, education, health, specific diseases, career, job progression, overcome difficulties in work environment, achievement of goals, purchase of assets like house, vehicle, etc; start of new business, recover from business losses, overcome enemies, legal battles, relationship issues, apart from a host of prayaschitams for sinful deeds. One can also aim for higher goals such as knowledge, enlightenment, and salvation.

To Recite Sundara Kandam, please visit the following Web-Sites.



இன்றைய (17/12/2017) மார்கழி மூல ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி நன்னாளில் இப்பதிவை இடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

1 comment: